தமிழ்நாட்டின் புதிய தலைமை செயலாளராக பொறுபேற்ற சிவ்தாஸ் மீனா இன்று தமிழ்நாடு ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.


தமிழ்நாடு தலைமை செயலாளராக இருந்த இறையன்பு, 60 வயது பூர்த்தியடைந்ததை அடுத்து அவர் நாளை பணி ஓய்வு பெறுகிறார். இதனால் அடுத்த தலைமை செயலாளர் யார் என்ற கேள்வி நிலவி வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது சீனியாரிட்டி, பணி திறன் உள்ளிட்டவை கருத்தில் கொண்டு 13 பேரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றதாக கூறப்பட்டது. இதில் சிவ்தாஸ் மீனாவிற்கு புதிய தலைமை செயலாளராக நியமனம் செய்யப்படுவார் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டது. சிவ்தாஸ் மீனா கவனித்து வந்த நகராட்சி நிர்வாக துறை கார்த்திகேயனுக்கு வழங்கப்படும் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில் சிவ்தாஸ் மீனா புதிய தலைமை செயலாளராக நியமனம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்தது.


இது இருபுறம் இருக்க ஜூலை 7 ஆம் தேதி ஆளுநர் டெல்லி பயணம் மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் ஆளுநர் மத்தியில் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. அண்மையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்கி ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார். இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பவே அது திரும்பி பெறப்பட்டது. அதுமட்டுமின்றி  ஆளுநரை நீக்க கோரி கடிதம் அனுப்பப்பட்டது. இப்படி இருக்கும் சூழலில் ஆளுநர் டெல்லி பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் போது உள்துறை விவகாரங்கள், தமிழ்நாட்டில் நடக்கும் அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 6 நாள் டெல்லியில் தங்கியிருந்து பயணம் மேற்கொண்ட பின்னர் தமிழ்நாடு திரும்பினார். நேற்று இரவு 8 மணி அளவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தமிழ்நாடு திரும்பினார்.




வழக்கமாக புதிய தலைமை செயலாளர் நியமனம் செய்யப்பட்டால் ஆளுநர், தலைமை செயலாளருக்கு அழைப்பு விடுக்கப்படும் அதன் பேரில் அவர் ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்திப்பார். இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்ற தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாவிற்கு ஆளுநர் ஆர்.என். ரவி தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆளுநர் 6 டெல்லி சென்று தமிழ்நாடு திரும்பிய நிலையில் இன்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆளுநரை சந்தித்துள்ளார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ADMK Protest: விலைவாசி உயர்வு.. தமிழ்நாடு முழுவதும் வெடிக்கிறது போராட்டம்.. அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


RTO Office on Saturday: மக்களே ஒரு செம்ம நியூஸ்.. இனிமே சனிக்கிழமைகூட லைசென்ஸ் வாங்கலாம்.. தமிழ்நாடு அரசு பிறப்பித்த வெயிட்டான உத்தரவு..