இந்த வார முழுவதும் தொடர் ஏற்றத்தில் சென்று கொண்டிருந்த இந்திய பங்கு சந்தை உலக பொருளாதார மந்த நிலை, பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் வார இறுதி நாளான இன்று சரிவுடன் நிறைவடைந்தது.


தேசிய பங்கு சந்தை குறியீடான நிஃப்டி-50, 116.40 புள்ளிகள் குறைந்து 18 ஆயிரத்து 800 புள்ளிகளில் உள்ளது. மேலும் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 415.69 புள்ளிகள் குறைந்து 62 ஆயிரத்து 868.50 புள்ளிகளில் உள்ளது.


 






லாபம்- நஷ்டம்:


அதானி போர்ட்ஸ், ஆசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, சிப்லா,ஹிண்டல்கோ,இன்ஃபோசிஸ்,லார்சன், மாருதி சுசுகி, நெஸ்ட்லே,பவர் கிரிட், ரிலையன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன. 


அப்போலோ மருத்துவமனை, ஆக்சிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், பிரிட்டாணியா, கோல் இந்தியா, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன.


அமெரிக்க மாதாந்திர வேலைகள் தரவு வெளியிடப்படுவதையொட்டி முதலீட்டாளரின் எச்சரிக்கையான அணுகுமுறை ஆகியவற்றிற்கு மத்தியில் உள்நாட்டு பங்குகள் சில அழுத்தங்களைக் கண்டன. இதன் காரணமாக உள்நாட்டு முதலீட்டாளர்கள், இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்யப்படுவதில் தாக்கம் ஏற்பட்டது. 


ரூபாயின் மதிப்பு:


மேலும் சீனாவில் கொரோனா தாக்கம் முழுமையாக முடியவில்லை. பொருளாதாரம் இயல்பு நிலைக்கு வரவில்லை என்ற கவலை முதலீட்டாளர்களுக்கு இருக்கிறது என கூறப்படுகிறது.  மேலும், கச்சா எண்ணெய் விலையிலும் பெரும் தாக்கம் ஏற்பட்டது. இதனால் கச்சா எண்ணெய் விலை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடையும் தன்மை காணப்படுகிறது.






இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பானது 81.31 ரூபாயாக ஆக உள்ளது.


A;so Read: Gold, Silver Price Today : அதிரடியாக விலை உயர்ந்த தங்கம், வெள்ளி: இன்றைய நிலவரம் இதுதான்!