தென்கிழக்கு ஒட்டிய மத்திய வங்க கடலில் தீவிர சூறாவளி புயல் "மோக்கா" மத்திய தென்கிழக்கு வங்கக்கடலில் அதி தீவிர சூறாவளி புயலாக மாறியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிதீவிர புயலாக மாறிய மோகா:
தென்கிழக்கு மத்திய வங்கக் கடலில் கடந்த 06 மணி நேரத்தில் 09 கி.மீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்த தீவிர சூறாவளி புயல் "மோக்கா" கடந்த 06 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெற்று இன்று காலை 05.30 மணி அளவில் மத்திய தென்கிழக்கு வங்கக்கடலில் அட்சரேகை (longitude) 13.2°N மற்றும் தீர்க்கரேகை (latitude) 88.1°E பகுதியில் மையம் கொண்டுள்ளது. அதாவது போர்ட் பிளேயருக்கு மேற்கு-வடமேற்கில் சுமார் 520 கிமீ தொலைவிலும், காக்ஸ் பஜாருக்கு 1010 கிமீ தென்-தென்மேற்கே (வங்காளதேசம்) தொலைவில், சிட்வேவிற்கு (மியான்மர்) 930 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இது வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து கிழக்கு மத்திய வங்கக் கடலில் மேலும் வலுப்பெற வாய்ப்பு உள்ளது. இது தென்கிழக்கு வங்காளதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரைகளை காக்ஸ் பஜார் (வங்காளதேசம்) மற்றும் கியாக்பியு (மியான்மர்) இடையே மே 14 ஆம் தேதி நண்பகல் சிட்வே (மியான்மர்) க்கு அருகில் அதி தீவிர சூறாவளி புயலாகக் கடக்கக்கூடும், புயல் கரையை கடக்கும் போது அதிகபட்சமாக 150- 160 கிமீ வேகத்தில் அவ்வப்போது 175 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
அந்தமான் கடல் பகுதிகள்: 12.05.2023 : சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்: 12.05.2023 மாலை வரை : காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 13.05.2023 அன்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்: 12.05.2023 காலை முதல் மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 135 கிலோ மீட்டர் வேகத்திலும், 13.05.2023 காலை முதல் மணிக்கு 130 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 155 கிலோ மீட்டர் வேகத்திலும், 13.05.2023 மாலை முதல் 14.05.2023 காலை வரை மணிக்கு 140 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 165 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள்: 12.05.2023 காலை மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 130 கிலோ மீட்டர் வேகத்திலும், 12.05.2023 மாலை மணிக்கு 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 145 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 13.05.2023 மாலை வரை மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.
வட கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்: 12.05.2023 அன்று சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து 13.05.2023 காலை மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும், 13.05.2023 மாலை முதல் 14.05.2023 காலை வரை மணிக்கு 140 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 165 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.
வட மேற்கு வங்கக்கடல் பகுதிகள்: 13.05.2023 காலை முதல் 14.05.2023 காலை வரை மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன்பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். ஆழ் கடலிலுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்த படுகிறார்கள்.