தனுஷ்கோடி வந்த ஏழு இலங்கை தமிழர்கள்! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் ஏழு பேர் நள்ளிரவில் தனுஷ்கோடிக்கு கள்ளத்தோணியில் வருகை தந்தனர்.

Continues below advertisement

இலங்கையில் தற்போது கடும் பொருளாதாராம் நிலவி வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இதனால், அங்கு இருக்கும் தமிழர்கள் தாங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாமல் திணறிவருகின்றனர். இதன் காரணமாக, இலங்கை தமிழர்கள் பலர் அங்கிருந்து தங்களுக்கு கிடைக்கும் படகுகள், தோணிகள் மூலம் குடும்பத்தினரோடு கடலில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வருகின்றனர். 

Continues below advertisement

இந்தநிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் ஏழு பேர் நள்ளிரவில் தனுஷ்கோடிக்கு கள்ளத்தோணியில் வருகை தந்தனர். அவர்களிடம் மெரைன் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச்சேர்ந்த ஒரு குடும்பத்தார் 4 வயது பெண்குழந்தை உட்பட 7 பேர் மன்னார் துறைமுகத்திலிருந்து நேற்று இரவு புறப்பட்டு நள்ளிரவு 1  மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதிக்கு வந்து சேர்ந்தனர். 

 தகவல் அறிந்த மெரைன் போலீசார் மண்டபம் மெரைன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணைக்கு பின்னர் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், பொருளாதார நெருக்கடி காரணமாகவும், அத்தியாவசிய பொருள்களின் விலை ஏற்றம் காரணமாகவும் வாழ வழி இன்றி அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டிலுள்ள அகதிகள் முகாம்: 

முன்னதாக, தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழ் அகதிகள் என்பது இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது பாதிக்கப்பட்டு தங்கள் உடைமைகளை இழந்து, அகதிகளாக தமிழகத்திற்கு வருகை தந்த இலங்கைத் தமிழர்களை குறிப்பதாகும்.

இலங்கையில் ஏற்பட்ட தனி தமிழீழ பிரச்சனையின்போது உயிரைக் காத்துக் கொள்வதற்காக எந்தவொரு பாதுகாப்பும் இன்றி மீன்பிடிப் படகுகளில் 1983ம் ஆண்டு முதன் முதலில் அகதியாக இந்தியா நோக்கி தமிழர்கள் வந்தனர். இவர்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டிலேயே அகதிகளாக தங்க வைக்கப்பட்டனர். வசதி இருந்தவர்கள் சிலர் விமானம் மூலமும் தமிழ்நாட்டிற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து 1983 -2010 ம் ஆண்டுவரை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் நோக்கி வர தொடங்கினர். தற்போது வரை இந்த நிலைமைகள் தொடர்கிறது. 

முன்னதாக, தமிழகத்திற்கு வருகை தரும் இலங்கைத் தமிழர்களுக்காக மண்டபத்தில் ஏற்கனவே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாம் தற்காலிக இடைத்தங்கல் முகாமாக மாற்றப்பட்டது. தமிழ்நாட்டில் மண்டபம், கொட்டப்பட்டு ஆகியவை இடைத்தங்கல் முகாம்களாக அமைக்கப்பட்டு தற்போது தற்காலிக முகாம்களாக மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கும்முடிப்பூண்டி, புழல், ஈரோட்டில் உள்ள பவாணிசாகர், திருச்சியில் உள்ள கொட்டப்பட்டு, வாழவந்தான்கோட்டை, இராமநாதபுரத்தில் உள்ள மண்டபம் ஆகிய முகாம்கள் அளவில் பெரிய முகாம்கள் ஆகும். இங்கு ஒவ்வொரு முகாமிலும் சுமார் 500 முதல் 1500 குடும்பங்கள் வரை தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Continues below advertisement