அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் பயணிக்கும் பயணிகளுக்கு 50% சலுகை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் வழக்கமாக பயணிக்கும் பயணிகளுக்கு பயணச்சலுகை அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது, ஒரு காலண்டர் மாதத்தில் 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “ அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் ஒரு காலண்டர் மாதத்தில் ஐந்து முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு தொடர் சலுகையாக பயணங்களுக்கு, அதாவது பயணம் முதல், அடுத்த ஆறா 50 சதவீதம் கட்டணச் சலுகை வழங்கப்படும். இந்தச் சலுகை அனைத்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுக்கும் பொருந்தும்.” என அறிவித்தார்.
அரசு விரைவு போக்குவரத்து தொடர்பான வெளியான அறிவிப்புகள்:
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பெண்களுக்கென பிரத்யேகமாக இருக்கைகள் ஒதுக்குதல்
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்கென பிரத்யேக இருக்கைகள் போதுமான அளவில் இல்லாததால் பெண்கள் தனியாக பயணம் செய்ய தயங்குகின்றனர். எனவே, பெண்களுக்கு பிரத்யேகமாக அதிக இருக்கைகள் வழங்கப்பட்டால் அவர்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயமின்றி நம்பிக்கையுடன் பயணிக்க விரும்புவர். இந்த தேவையை நிவர்த்தி விரைவுப் செய்யும் பொருட்டு, அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பெண்களுக்கென தனியாக 4 இருக்கைகள் ஒதுக்கப்படும். பயண நேரத்திற்கு 24 மணி நேரம் முன்பதிவில் முன்புவரை இணையதள பெண் பயணிகளுக்கான இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருக்கும்.
அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் உள்ள உணவகங்களை நடத்துவதற்கு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு முன்னுரிமை
பெண்களுக்கு அதிகாரமளிக்கும் விதமாகவும், தரமான உணவுப் பொருட்களை வழங்குவதில் விதமாகவும், பேருந்து பணிமனைகளில் சுய உதவிக் மகளிர் சுய உதவிக் குழுக்களின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும், பேருந்து பணிமனைகளில் உள்ள உணவகங்களை (Canteens) நடத்துவதற்கு மகளிர் குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் உள்ள பணியாளர்கள் ஓய்வு அறைகளுக்கு குளிர்சாதன வசதியை ஏற்படுத்துதல்
அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பணிபுரியும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் நீண்ட நேரம் பேருந்துகளில் பணி செய்வதால், அவர்கள் ஓய்வெடுக்கும் சூழ்நிலையை உருவாக்குவதற்காக, அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகளில் உள்ள பணியாளர்கள் ஓய்வு அறைகளில் குளிர்சாதன வசதி ஏற்படுத்தப்படும்.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் இளைஞர்களுக்கான வர்த்தக வாய்ப்புகள்
தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் நடவடிக்கையாக சுயதொழில் மூலம் வருமானம் ஈட்டும் வகையில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் உள்ள பயண சுமைப் பெட்டிகள் ஒரு மாதத்திற்கு ரூ.6000/- வீதம் வாடகை அடிப்படையில் இளைஞர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் புறப்படும் மற்றும் சேருமிடங்களுக்கு இடையே விவசாய பொருட்கள் அல்லது தொழில்துறை தயாரிப்புகளை சிப்பம் (Parcel) மூலம் அனுப்ப இந்த பயணச் சுமைப் பயன்படுத்தலாம். (ஓராண்டுக்கு மட்டுமே பொருந்தும்)
அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிமனை அளவில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பள்ளி இறுதி தேர்வில் முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ / மாணவியருக்கு பரிசுத்தொகை வழங்குதல்
அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள பணிமனைகளில் ஒவ்வொரு பணிமனை 315 அளவிலும், தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பள்ளி இறுதி தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெறும் மாணவ, மாணவியருக்கு முறையே ரூ.1500/- ரூ.1000/- மற்றும் ரூ.500/- என ஆண்டுதோறும் ரூ.18.90 இலட்சம் செலவில் பரிசுத்தொகை வழங்கப்படும்.
அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளல்
அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பேருந்துகளில் நீண்ட நேரம் தொடர்ந்து பணிபுரிவதாலும், பணிமனைகள் போன்ற இடங்களில் இயந்திர சூழ்நிலைகளில் பணிபுரிவதால் அவர்களின் நலனை கருத்திற்கொண்டு மருத்துவ பரிசோதனை செய்ய மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும்