மாநகராட்சி, நகராட்சி ஊராட்சி ஆகிய பகுதிகளில் ரூ.13.55 கோடி மதிப்பீட்டில் 22 பல்வேறு புதிய திட்டப்பணிகளை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு V செந்தில்பாலாஜி அவர்கள் துவக்கிவைத்து 3 பகுதிநேர நியாய விலைக்கடைகளை திறந்து வைத்தார்.




கரூர் மாநகராட்சி, நகராட்சி ஊராட்சி ஆகிய பகுதிகளில்  மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு  V செந்தில்பாலாஜி  ரூ.13.55 கோடி மதிப்பீட்டில் 22 பல்வேறு புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்து  இதில் 3 பகுதிநேர நியாய விலைக்கடைகளை திறந்து வைத்தார்கள். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், சட்ட மன்ற உறுப்பினர்கள் திரு.இரா.மாணிக்கம் (குளித்தலை), திரு,ஆர்.இளங்கோ(அரவக்குறிச்சி), திருமதி.க.சிவகாமசுந்தரி(கிருஷ்ணராயபுரம்), கரூர் மாநகராட்சி மேயர் திருமதி.க.கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.


கரூர் மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பேருந்தின் நிலையம் ரவுண்டானாத்தில் 15 -வது நிதிக் குழு மானியத்தில் ரூ.13.2 லட்சம் மதிப்பீட்டில் செயற்கை நீரூற்ற மற்றும் மின் விளக்குகள் பொருத்தி அழகுப்படுத்தும் பணிகளையும், முனியப்பன் கோவில் அருகில் ஈரோடு, கோவை சாலை பிரிவில் 15- வது நிதிக் குழு மானியத்தில் ரூ.14.6 லட்சம் மதிப்பீட்டில் ஈரோடு ரவுண்டானாவில் சாலை செயற்கை நீரூற்ற மற்றும் மின் விளக்குகள் பொருத்தி அழகுப்படுத்தும் பணிகளையும், வேலுசாமிபுரம் பகுதியில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தத்தில் புதிய பயணியர் நிழற்கூடம் அமைப்பதற்கான பணிகளையும்,  லைட் ஹவுஸ் கார்னர் காந்தி சிலை அருகில் 15 வது நிதிக் குழு மானியத்தில் ரூ. 20.4 லட்சம் மதிப்பீட்டில் லைட் ஹவுஸ் கார்னர் ரவுண்டானாவில் செயற்கை நீரூற்ற மற்றும் மின் விளக்குகள் பொருத்தி அழகுப்படுத்தும் பணிகளையும்,




திருமாநிலையூர் ரவுண்டானா பெரியார் சிலை அருகில் 15 வது நிதிக் குழு மானியத்தில் ரூ.13.2 லட்சம் மதிப்பீட்டில் திருமணியூர் ரவுண்டானாவில் செயற்கை நீரூற்ற மற்றும் மின் விளக்குகள் பொருத்தி அழகுப்படுத்தும் பணிகளையும், அதே திருமாநிலையூர் பகுதியில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்கூடம் அமைப்பதற்கான பணிகளையும்,  செல்லாண்டிபாளையம் நீர்த்தேக்க தொட்டி வளாகத்தில் 15 -வது நிதிக் குழு மானியத்தில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைப்பதும் மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பழுது பார்க்கும் பணிகளையும், ராயனூர் பகுதியில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்கூடம் அமைப்பதற்கான பணிகளையும்,  காளியப்பனூர் பகுதியில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்கூடம் அமைப்பதற்கான பணிகளையும்,  சுங்க கேட் ரவுண்டான பகுதியில் 15 வது நிதி குழு மானியத்தில் ரூ.16.8 லட்சம் மதிப்பீட்டில் சுங்க கேட் ரவுண்டானாவில் செயற்கை நீரூற்ற மற்றும் மின் விளக்குகள் பொருத்தி அழகுப்படுத்தும் பணிகளையும், காந்திகிராமம் தெரசா பள்ளி எதிர்புறத்தில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்கூடம் அமைப்பதற்கான பணிகளையும்,  சர்ச் கார்னர் பகுதியில் 15 வது நிதி குழு மானியத்தில் ரூ.10.6 லட்சம் மதிப்பீட்டில் சர்ச் கார்னர் ரவுண்டானாவில் செயற்கை நீரூற்ற மற்றும் மின் விளக்குகள் பொருத்தி அழகுப்படுத்தும் பணிகளையும்,, வி.வி.ஜி நகர் சாய்பாபா கோவில் அருகில் 15வது நிதி குழு மானியத்தில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி வளாகத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியினையும், அம்பேத்கார் நகர் பகுதியில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் அமைக்கும் பணியினையும், வாங்கப்பாளையம் செக் போஸ்ட் அருகில் 15 வது நிதி குழு மானியத்தில் ரூ.12.8 லட்சம் மதிப்பீட்டில் வாங்க பாளையம் ரவுண்டானாவில் செயற்கை நீரூற்ற மற்றும் மின் விளக்குகள் பொருத்தி அழகுப்படுத்தும் பணிகளையும், வெ. பசுபதிபாளையம் காதப்பாறை ஊராட்சி பகுதி, தண்ணீர் பந்தல் பாளையம் மண்மங்கலம் பகுதி மற்றும் சிவியாம்பாளையம், மண்மங்கலம் ஊராட்சி பகுதியில் கூட்டுறவு துறை சார்பில் பகுதிநேர நியாய விலை கடையை திறந்து வைத்தும், புகழிமலை திருக்கோவில் அடிவாரம் பகுதியில் இந்து சமய அறநிலை துறை சார்பில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அருள்மிகு புகலிமலை பாலசுப்பிரமணி திருக்கோவில் அடிவாரம் மண்டபம் அமைக்கும் பணியினையும், வேலாயுதம்பாளையம் பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் புகலூர் நகராட்சி புதிய அலுவலக கட்டிடம் அமைக்கும் பணியினையும், அஞ்சூர் பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.6.60 கோடி மதிப்பீட்டில் அஞ்சூர் அழகு நாச்சியம்மன் கோவில் பஞ்சாயத்து சாலை 0.6கிமீ புதிய உயர் மட்ட பாலம் அமைக்கும் பணியினையும், பள்ளப்பட்டி சந்தைப்பேட்டை பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் பள்ளப்பட்டி நகராட்சி புதிய அலுவலக கட்டிடம் அமைக்கும் பணியினையும் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.V செந்தில்பாலாஜி அவர்கள் பணிகளை தொடங்கி வைத்தார்கள்.


முன்னதாக திருமாநிலையூரில் ரூ.40 கோடி மதிப்பீட்டில்   கட்டப்பட்டு வரும் புதிய பேருந்துநிலைய கட்டுமானப்பணிகளை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவிக்கையில், 




மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று கரூர் சட்டமன்றத் தொகுதியில் 22 பணிகளுக்காக 13 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு 22 பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன தமிழகத்தின் ஒப்பற்ற முதலமைச்சர் அவர்கள் தேர்தல் நேரத்தில் கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்து அந்த வாக்குறுதியை ஆட்சி பொறுப்பு ஏற்ற உடன் முதல் ஆண்டிலேயே அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.  அந்த அறிவிப்புகளின் அடிப்படையில் 40 கோடி ரூபாய் நிதிகளை ஒதுக்கி ஆணையிட்டார்.  கடந்த ஜூலை 2-ம் தேதி கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்து பல்வேறுஅரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய சிறப்பானதொரு நிகழ்வில் நீண்ட நாள் கோரிக்கையாக ஏறத்தாழ 35 ஆண்டுகள் மேற்பட்ட ஆண்டுகளின் கோரிக்கையாக இருக்கும் புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு விட்டது.


இப்பொழுது பணிகள் மிக துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன இன்னும் பத்து மாத காலத்திற்கு உள்ளாகவே இந்த புதிய பேருந்து நிலைத்திருடைய கட்டுமான பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் திருகரங்களால் திறந்து வைக்கப்பட உள்ளது.  அதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் மிக வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மதிப்புக்குரிய மாவட்ட ஆட்சித் தலைவருடைய தலைமையில் கரூர் மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேவையான கோரிக்கைகளை முன்னெடுத்து அதற்கான நிதிகளை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி வருகின்றார்கள். குறிப்பாக முருங்கை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பது மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கையாகும். அதற்கான முருங்கை உற்பத்திக்கான கொள்முதலை செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகள் கோரிக்கை தமிழகத்தினுடைய முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள் நிறைவேற்றக்கூடிய வகைகள் கரூரில் முருங்கை பூங்கா அமைப்பதற்கான உத்தரவுகளை வழங்கி இருக்கின்றார்கள்.  இன்னும் 15 தினங்களுக்குள் அந்த இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு மாவட்ட ஆட்சியர் மூலமாக கருத்துருக்கள் அனுப்பப்பட்டு விரைவில் கரூரில் குறிப்பாக அரவக்குறிச்சியில் முருங்கை பூங்கா அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளது.


 


இப்பொழுது அமைவிருக்கின்ற பேருந்து நிலையம் புறநகர் பேருந்து நிலையமாகவும் கரூரில் உள்ள பேருந்து நிலையம் நகர பேருந்து நிலையமாகவும் மாற்றியமைக்கப்படும் மாமன்ற கூட்டத்தில் வணக்கத்திற்குரிய மேயர் அவர்கள் முன்னிலையில் இந்த புதிய பேருந்து நிலையத்திற்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பெயரை தாங்கி இருக்க கூடிய வகையில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் என்று அழைக்கப்படும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அரசு விழாவில் எந்தெந்த திட்டங்களை தொடங்கி வைத்தார்கள் எந்தெந்த திட்டங்களை திறந்து வைத்தார்கள் என்பதை பத்திரிக்கையிலும் தொலைக்காட்சிகளும் பார்த்திருந்தால் அவர்களுக்கு புரிந்திருக்கும் ஆட்சி பொறுப்பேற்ற இந்த ஒன்றை ஆண்டுகளில் ஏறத்தாழ 3 ஆயிரத்து 500 கோடிக்கும் மேற்பட்ட நிதிகளை கரூர் மாவட்டத்திற்கு கொடுத்து புதிய பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கி இருக்கிறார்கள்.  இந்த இடங்களில் தான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை தங்களின் திருக்கரங்களால் வழங்கினார்கள்.  40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான நிதிகளை ஒதுக்பி அதற்கான பணிகளையும் தொடங்கி வைத்திருக்கின்றார்கள். தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியான கரூர் மாவட்டத்தில் ஒரு அரசு வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும் என்ற வாக்குறுதி ஆட்சி பொறுப்பேற்ற முதல் ஆண்டிலேயே அதற்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டது.


முதல் ஆண்டிலேயே மாணவர் சேர்க்கையும் தொடங்கி வைத்து மிகச் சிறப்பாக மாணவர்கள் கல்வியை பயில்கிறார்கள் அதேபோல அரவக்குறிச்சியில் அரவக்குறிச்சியில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்ற வாக்குறுதியையும் முதல் ஆண்டில் நிறைவேற்றி தந்து அரவக்குறிச்சி பகுதியில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மிக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கிருஷ்ணராயபுரம் தொகுதியான தரகம்பட்டியில் இருக்கக்கூடிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான நிதிகளை ஓதுக்கி அதற்கான பணிகளும் தொடங்கி இருக்கின்றன. அதேபோல் குளித்தலை மருதூர் பகுதியில் புதிய கதவணை அமைப்பதற்கான 750 கோடி ரூபாய் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அதற்கான திட்ட மதிப்புகள் தயார் செய்யப்பட்டு அதற்கான பணிகளும் விரைவில் தொடங்க இருக்கின்றன 3500 கோடிக்கும் மேற்பட்ட நிதிகளை கொடுத்து பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கி இருக்கின்றார்கள்என மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்  திரு V செந்தில்பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.எம்.லியாகத், கரூர் மாநகராட்சி துணைமேயர் திரு.ப.சரவணன், ஆணையர் திரு.ரவிசந்திரன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.ரூபினா, கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் திரு.கந்தராஜா, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.தட்சிணமூர்த்தி, மண்டல தலைவர்கள் திரு.ராஜா, திரு.அன்பரசன், திரு.கனகராஜ், திரு.சக்திவேல், வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.