பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டும்  வரும் சாமியார் நித்தியானந்தா முன்னதாக ஜீவ சமாதி அடைந்தார் எனத் தகவல்கள் பரவிய நிலையில்,  ”அப்படி எல்லாம் ஒன்றுமில்லை, இன்று இரவு 8.30 மணிக்கு லைவில் தோன்றி நித்தியானந்தா தன் கோடான கோடி பக்தர்களுக்கு ஆசி வழங்குவார்” என அவரது ட்விட்டர் பக்கத்தில் முன்னதாக அறிவிக்கப்பட்டது.


அதன்படி, நித்தியானந்தாவை தரிசிக்க அவரது சமூக வலைதளப் பக்கங்களை சுற்றி நித்தியானந்தா பக்தர்கள் முகாமிட்டுள்ள நிலையில், புதிதாக ‘கைலாசா பரம்வீர் சக்ரா விருதுகள்’ அறிவிக்கப்படுவதாக அவரது யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.


இந்தியாவில் ராணுவத்தினருக்கு வழங்கப்படும் உயரிய விருதாக பரம் வீர் சக்ரா விருது உள்ள நிலையில், சாமியார் நித்தியானந்தா ஸ்ருஷ்டித்துள்ள தனித்தீவான கைலாசாவிலும் இந்த பரம் வீர் சக்ரா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


முன்னதாக, சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தஞ்சாவூர் களிமேடு அப்பர் கோயிலில் நடைபெற்ற சப்பர உலாவில் சப்பரம் மின்கம்பியில் உரசி ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், இந்த 11 பேருக்கும் கைலாசா பரம் வீர் சக்ரா விருதை அறிவித்துள்ளது கைலாசா நிர்வாகம்


இந்நிலையில், விரைவில் நித்தியானந்தா லைவில் தோன்றி அவரைப் பற்றி வெளியாகும் கட்டுக்கதைகளையும் மர்ம முடிச்சுகளையும் உடைப்பாரா என அவரது பக்தர்கள் கைலாசாவின் சமூக வலைதளப் பக்கத்தில் முகாமிட்டுக் காத்துள்ளனர்.


 






மேலும், கடந்த இரண்டு மாதங்களில் தனக்கு என்ன நடந்தது, ஏன் நடந்தது, எப்படி நடந்தது என்பதை தனது ஆசி உரையின் நடுவே, வெளியிடவிருக்கிறார் நித்யானந்தா. இதுவரை இல்லாத மருத்துவ ரீதியான விளக்கங்களும், தன்னைப்பற்றிய விமர்சனங்களால் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றியும் இன்று இரவு தெளிவாக நித்யானந்தா விளக்கவிருக்கும் நிலையில், அவரது பக்தர்கள் அந்த தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண