அனுமதி இல்லாமல் வாகனங்களில் மாற்றம் செய்யப்படுவது குறித்து போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


சமீப காலமாக மோட்டார் வாகனங்கள் தானாக தீ பற்றி எரியும் தீ விபத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவ்விபத்துக்கள் பற்றி ஆய்வு செய்கையில் மோட்டார் வாகனங்களில் மாறுதல் செய்யப்படுகையில் அங்கீகரிக்கப்படாத CNG/ LPG மாற்றங்கள், அதற்கான அங்கீகரிக்கப்படாத அல்லது தகுதியில்லாத நிறுவனங்களால் மாற்றம் செய்யப்பட்டு, வாகனங்கள் தீ விபத்துக்கு உள்ளாவது தெரிய வந்துள்ளது.


வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உரிய அனுமதியின்றி வாகனங்களில் மாற்றம் செய்யப்படுவது மோட்டார் வாகனச் சட்டம் (மற்றும்) விதிகளின்படி குற்றமாகும். எனவே, வாகன உரிமையாளர்கள் இவ்வகையான செய்கையில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.


இவ்வாறு போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் தெரிவித்துள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI