போன மாநாட்டில் சிஎம் சாராக (முதல்வர்) இருந்தவர் இந்த மாநாட்டில் எப்படி அங்கிள் ஆனார் என்று தவெக தலைவர் விஜயை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்

நான் விதைத்தது நெல், அது வளரும்"

"ஒரு மாநாட்டில் கூட்டம் திரண்டாலே வெற்றி கிடைக்கும் என்பதில்லை. அணில் ஏன் அங்கிள், அங்கிள் என்று கத்துகிறது. அது ஜங்கிள், ஜங்கிள் தான் கத்த வேண்டும். போனா மாநாட்டில் சிஎம் சாராக (முதல்வர்) இருந்தவர் இந்த மாநாட்டில் எப்படி அங்கிள் ஆனார்.

நான் விதைத்திருப்பது விதை நெல்; அது வளமான பயிராக வளரும். விஜயகாந்த் பற்றி பேசுவதால் வாக்குகள் கிடைக்காது. மக்களுக்கு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது நன்றாக தெரியும். எந்த புயல், சுனாமி வந்தாலும் என் தம்பிகள், தங்கைகள், தாய்மார்கள் என்னுடன் நிற்பார்கள்," என சீமான் தெரிவித்தார்.

வாக்கு இயந்திரங்களை எதிர்த்து சீமான்

மின்வாக்கு இயந்திரங்களை (EVM) சந்தேகிக்கின்றதாகவும் இருப்பதாக பேசிய அவர். "இந்த வாக்கு இயந்திரங்களை ஜப்பான் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆனால் ஜப்பானிலேயே வாக்குச்சீட்டு முறையே உள்ளது. அப்படியிருக்க, இந்தியாவில் 42 நாள் வரை இயந்திரங்களை சேமித்து வைப்பது எதற்காக? போலீஸ் பாதுகாப்பு அளிப்பதாக சொல்கிறார்கள். அவர்கள் சம்பளம் வாங்கும் போலீசே. முறைகேடு நடக்காது என்று யார் உறுதி தர முடியும்? எனவே வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும்," என்றார்.

தவெக மாநாட்டில் விஜய் பேச்சு

மறுபுறம், தவெக மாநாட்டில் பேசிய விஜய், "எம்.ஜி.ஆர் தொடங்கிய அந்த கட்சியை இப்போ யார் காப்பாற்றுகிறார்கள்? அந்த கட்சி எந்த நிலையில் உள்ளது? அப்பாவி தொண்டர்கள் தங்களின் வேதனையை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். பொருந்தாத கூட்டணியாக அதிமுக - பாஜக கூட்டணி உள்ளது," எனக் கூறினார்.

விஜய் வாழ்த்து – சீமான் பதில்

விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, சீமான், "தேர்தல் நெருங்குகிறது என்பதால்தான் இப்போது விஜய் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறுகிறார். விநாயகர் நம்ம ஆளுதானே? வாழ்த்திக் கொண்டாட வேண்டியது தானே? அதில் ஒன்றும் விசேஷமில்லை. தமிழனின் ஆட்சிக் காலத்தில் அவர் தெய்வமாக இருந்தார்," எனக் கூறினார்.