சென்னை மாநகராட்சியில் மாதாந்திர கவுன்சில் கூட்டம் , மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.
அப்போது பேசிய துணை மேயர் மகேஷ்குமார் ;
பஞ்சாப் மாநிலத்தில் போக்குவரத்து சிக்னல்களில் குழந்தையை வைத்து பிச்சை எடுப்பதை தடுக்க , டி.என்.ஏ என்ற மரபணு பரிசோதனைக்கு பிச்சை எடுப்போர் உட்படுத்தப்படுகின்றனர். குழந்தை வேறு ஒருவருடையது என்று கண்டறியப்பட்டால் , குழந்தையை மீட்டு காப்பகத்தில் பராமரிக்கின்றனர்.
அதே போல் , சென்னையிலும் சிக்னல்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகளின் டி.என்.ஏ வை பரிசோதிக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகளின் பெற்றோர் அவர்கள் தானா என்பதை கண்டறிய முடியும். மீட்கப்படும் குழந்தைகளை, மாநகராட்சியின் குழந்தை மீட்பு மையங்களில் பராமரித்து தரமான கல்வியை வழங்க முடியும். இதை மாநகராட்சியில் அமல்படுத்த வேண்டும் என பேசினார். இதற்கு பதில் அளித்த மேயர் பிரியா, இது நல்ல திட்டம். இதை சென்னை மாநகராட்சியில் அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றார்.
ரூ.75 கோடியில் கவுன்சிலர் அரங்கம்
சென்னை மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற , சென்னை மாநகராட்சி மாதாந்திர கவுன்சில் கூட்டத்தில் 84 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் முக்கியமானவை ,
1. விருகம்பாக்கம் நீர்வழி கால்வாய் மற்றும் ஓட் டேரி நல்லா கால்வாய் , 92.77 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட உள்ளன. இப்பணிகளை மேற்பார்வையிட, 1.38 கோடி ரூபாய் ஒதுக்கி , திட்ட மேலாண்மை கலந்தாலோசகர் நியமிக்க அனுமதிக்கப்படுகிறது.
2. தண்டையார்பேட்டை , ராயபுரம், திரு.வி.க., நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை , கோடம்பாக்கம் , அடையாறு ஆகிய மண்டலங்களில் 803 உட்புற சாலைகள், 80 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்படும்
4. தண்டையார்பேட்டை கேப்டன் காட்டன் கால்வாய் துார்வாரும் பணி , 7.12 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் விடப்பட்டு உள்ளது.
5. ரிப்பன் மாளிகை வளாகத்தில் , புதிதாக மாநகராட்சி கவுன்சில் கூட்ட அரங்கம் , 74.70 கோடி ருபாய் மதிப்பில் கட்ட ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.
6. ராயபுரம், திரு.வி.க., நகர், அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையாறு, சோழிங்கநல் லுலூர் ஆகிய மண்டலங்களில் உள்ள 15 பள்ளிகளில் , 1.75 கோடி ரூபாயில் , தானியங்கி இயந்திரம் வாயிலாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் செயல்படுத்த அனுமதி.
7. அண்ணா நகர் மண்டலம் வி.எஸ்.புரம் பகுதியில் உள்ள இரவு காப்பக கட்டடம் , திருநங்கையர் தங்குவதற்காக , மாதம் 30,946 ரூபாய் மாத வாடகை அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறது.
என இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.