அரவக்குறிச்சி அருகே டூ வீலர்கள் நேருக்கு நேர் மோதி தனியார் பேருந்துகுள் விழுந்து சம்பவ இடத்தில் பள்ளி மாணவர் உயிரிழந்தார்.


திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி மகன் நவீன் குமார் வயது 15. இவர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா ஈசநத்தம் பகுதியில் செயல்படும் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று  பள்ளி மாணவர் இருசக்கர மோட்டார் வாகனத்தில் அவரது அக்கா பிரியா (வயது 16) உடன் ஈசநத்தம் சென்றனர். அப்போது ஈசநத்தம் வீரக்குமார் திருமண மண்டபம் அருகே


 




 


 


வந்தபோது, எதிர் திசையில் வந்த மற்றொரு டூவீலர் மீது மோதி கரூர் - திண்டுக்கல் செல்லும் தனியார் பேருந்து அடியில் விழுந்து மாணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார்.


மாணவரின் சகோதரி லேசான காயங்களுடன் உயிர்த்தப்பியுள்ளார். இந்த சம்பவம் ஏற்பட்டவுடன் தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பேருந்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடினர். உடனே அப்பகுதி பொதுமக்கள் அரவக்குறிச்சி காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உயிரிழந்த மாணவன் நவீன் குமார் உடலை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு சென்றனர். பள்ளி மாணவன் மீது பேருந்து மோதிய சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளது.


 




பள்ளி மாணவர் தனியார் பேருந்தில் தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அரவக்குறிச்சி காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண