Anbil Mahesh : மாணவிகளுக்கான பள்ளிகளில் பெண் ஆசிரியர்கள் மட்டுமே நியமனமா?

மாணவிகள் மட்டும் படிக்கும் பள்ளிகளுக்கு பெண் ஆசிரியர்களை நியமிப்பது குறித்து பரிந்துரைகள் வந்திருப்பதால் இது குறித்து ஆலோசனை..

Continues below advertisement

பள்ளிகளில் ஆசிரியர் மீதான பாலியல் புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் இதன் மீதான நடவடிக்கைகளை எடுக்கவும் இனிவரும் காலங்களில் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாத வகையில் பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அந்த வகையில் தற்போது மாணவிகள் மட்டும் படிக்கும் பள்ளிகளுக்கு பெண் ஆசிரியர்களை நியமிப்பது குறித்து பரிந்துரைகள் வந்திருப்பதால் இது குறித்து ஆலோசனை செய்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். 

Continues below advertisement

முன்னதாக சென்னை, கே.கே.நகரில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் ராஜகோபாலன். அவர் மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் அவர் மீது பாலியல் புகார் அளித்தனர். இதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், சென்னை அயனாவரத்தில் உள்ள மூன்று தனியார் பள்ளிகளில் அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டு புகார் எழுந்தது. இந்த சம்பவம் பெற்றோர்கள் கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், அந்த புகார்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே சென்னைப் பள்ளி விவகாரத்தில் ஆசிரியர் ஆன்லைன் வகுப்புகளிலும், வாட்சப்பிலும் மாணவர்களிடம் பாலியல் ரீதியாக தகாதமுறையில் நடந்துகொண்டதாக எழுந்த புகாரையடுத்து  குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர், பள்ளி முதல்வர், பள்ளி நிர்வாகிகளை குழந்தைகள் உரிமை ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாகக் கூடிய பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையிலான ஆலோசனைக்குழு ஆன்லைன் வகுப்புகளுக்கான கட்டுப்பாட்டு விதிகளை கடுமையாக்குவது குறித்து ஆலோசித்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஜூன் 21 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி- பிரதமர் மோடி

Continues below advertisement
Sponsored Links by Taboola