வேலை இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை.... விண்ணப்பிப்பது எப்படி ? முழு விவரம் உள்ளே...!

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து, வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின்கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றது.

Continues below advertisement

விழுப்புரம் : 01.04.2025 முதல் தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து, வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின்கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

Continues below advertisement

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 01.04.2025 முதல் தொடங்கும் காலாண்டிற்கு. படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து, வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின்கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

31.03.2025-அன்றைய நிலையில், பத்தாம் வகுப்பு தோல்வி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி, +2தேர்ச்சி மற்றும் பட்டப்படிப்பு கல்வித்தகுதிகளை வேலைவாய்ப்பு அலுவலுகத்தில் பதிவுசெய்து, பதிவினை தொடர்ந்து புதுப்பித்து, ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர் / இளைஞிகளுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து ஓர் ஆண்டிற்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தமிழ்நாடு அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

வயது வரம்பு :

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு மொத்த வருமானம் ரூ,72000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும், (மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு வருமான வரம்பிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது). தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 31.03.2025 அன்றைய நிலையில் 45 வயதிற்கு மிகாமலும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழில்பட்டப்படிப்புகள் முடித்திருந்தால் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற இயலாது.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் மனுதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை அனைத்து வேலை நாட்களிலும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். வேலைவாய்ப்புத்துறையின் இணையதளத்திலிருந்தும் https://employmentexchange.tn.gov.in/  விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

01.04.2025 உடன் தொடங்கும் காலாண்டிற்கான பூர்த்தி செய்யப்பட்ட உதவித்தொகை விண்ணப்பங்களை மனுதாரர்கள் 2025 மே 31-ம் தேதி வரை அனைத்து அலுவலக வேலைநாட்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் விழுப்புரத்தில் இயங்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப்பிரிவில் அசல் கல்விச்சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கணக்குப் புத்தகத்துடன் நேரில் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Continues below advertisement
Sponsored Links by Taboola