முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய புகாரில் யூடியூபர் சாட்டை முருகன் கைது செய்யப்பட்டார்.


குமரி மலைகளை உடைத்து கேரளாவிற்கு கடத்துவதை கண்டித்து கன்னியாகுமரியின் தக்கலையில் நேற்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட யூடியூபர் சாட்டை முருகன், தலைவர்கள் பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. கேரள முதலமைச்சருடன், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை ஒப்பிட்டு சர்சையாகவும் பேசியதாகவும் கூறப்படுகிறது. 


இதனைத்தொடர்ந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விஜயநாராயணம் காவல் நிலையத்தில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப்புகாரின் அடிப்படையில், நாகர்கோவில் போலீசார் நாங்குநேரி பகுதியில் சாட்டை துரைமுருகனை வைத்து கைது நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர். இதனைத்தொடர்ந்து, சாட்டை துரைமுருகனை அக்டோபர் 25ஆம் தேதி வரை சிறையில் அடைக்க பத்மநாபபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.


 






முன்னதாக, தலைவர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சாட்டை துரைமுருகன் சமீபத்தில்தான் ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.