கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் அருங்குணம் அருகே கெடிலன் ஆற்றில் குளித்த 6 சிறுமிகள் உள்பட 7 பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த அருங்குணம் ஏ.குச்சிப்பாளையத்தையொட்டி கெடிலம் ஆறு உள்ளது. இன்று காலை அதே பகுதியை சேர்ந்த 6 சிறுமிகள் உள்பட, பிரியா(17), சங்கீதா(17), சுமிதா (16) மோனிகா(15), பிரியதர்ஷினி(14), கவிதா(12), மற்றும் நவநீதா(9) என ஏழுபேர் தடுப்பணையில் குளிக்க சென்றனர். அங்குள்ள தடுப்பணையில் குளித்த போது 7 பேரும் நீரில் மூழ்கினர்.
இந்தநிலையில், சசிகலா கடலூர் மாவட்டம் அருங்குணம் பகுதிக்கு சென்று அங்கு உயிரிழந்த 7 சிறுமிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்பொழுது, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்த கிராமத்தில் நீரோடையில் உயிர் இருந்த -சிறுமிகள் இந்த கிராமத்தில் கழிப்பறை வசதி இல்லாததால் ஏமாற்று பகுதிக்கு சென்று அங்கு குளித்ததால் பிரித்திருக்கிறார்கள் எனவே இந்த கிராமம் முழுவதும் கழிப்பறை வசதி உடனடியாக ஏற்படுத்தி தர அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
திமுக அரசு அடிக்கடி பயன்படுத்தும் திராவிட மாடல் குறித்து கருத்து தெரிவித்த சசிகலா,திராவிட மாடல் என திமுக அரசு தற்போது பேசி வருகிறது ஆனால் அண்ணா திமுக ஏற்கனவே திராவிட மாடலை உருவாக்கி சமூக நீதியை செயல்படுத்தி வந்தது. குறிப்பாக அதிமுக ஆட்சிகாலத்தில் பெண்களுக்காக முக்கியத்துவம் கொடுத்து பல திட்டங்களை சமூக நீதியோடு செயல்படுத்தியது.
ஆனால் தற்போது உள்ள அரசு சமூக நீதிக்கான அரசு திராவிட மாடல் என பேசி வருகிறது. பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட திட்டத்தை ரத்து செய்து தான் உங்கள் திராவிட மாடலா என கேள்வி எழுப்பினார். மேலும், செவிலியர்களை தேவைக்கு ஏற்ப வேலை வாங்கி விட்டு தற்போது பணி நிரந்தரம் வழங்காமல் இருப்பது வேதனையாக உள்ளது நிரந்தர பணி வழங்க வேண்டியது அரசின் கடமை என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பாஜகவிற்கு வரவேண்டும் என கோரிக்கை வைத்தது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும், அவர் கட்சிக்கு வர வேண்டும் என அவரது ஆசையை தெரிவிக்கிறார் வேறு ஒன்றும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
நடராஜர் கோயில் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, எதிர்கட்சியாக நான் தான் செயல்படுகிறேன். நடராஜர் கோவில் விவகாரத்தில் அரசு தலையிட தலையிடக் கூடாது. அது நல்லது அல்ல. நீதிமன்ற உத்தரவுப்படி தீட்ச்சதர்ரகளிமே இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்