சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சுதாகரன், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து இன்று விடுதலையானார்.  2017 முதல் சிறையில் இருந்த சசிகலா, இளவரசி 10 கோடி ரூபாய் அபராதம் செலுத்தியதால் கடந்த ஜனவரி 21ஆம் தேதி விடுதலை ஆனார்கள். அபராதம் செலுத்தாததால் கூடுதலாக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலையானார். அடுத்தாண்டு பிப்ரவரி வரை சிறையில் இருக்க வேண்டிய நிலையில் 89 நாட்கள் முன்னதாகவே விடுதலையானார். இதனிடையே, சசிகலா இன்று ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார்.