என் நிழலிடம் கூட யாரும் வர முடியாது.. அதிமுக பிரிவினைக்கு பாஜக காரணமா என்ற கேள்விக்கு சசிகலா கூறியுள்ளார்.
மன்னார்குடியில் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,”தலைவர் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள், அனைவரின் ஒப்புதலோடு எதையும் செய்ய வேண்டும். தொண்டர்கள் எப்போதுமே படிக்கட்டின் கீழ்ப்படியில் நிற்பார்கள் அவர்களால் தான் நாம் மேடையில் நிற்கிறோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். அது மாதிரியான ஒரு சூழ்நிலை அதிமுகவில் தற்போது இல்லை. இது அனைத்திற்கும் ஒரு முடிவை கீழ்ப்படியில் நின்று கொண்டிருக்கும் தொண்டர்கள் விரைவில் நல்ல எடுப்பார்கள்” என்றார்.
மேலும் இடைத்தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் பாஜக அலுவலக வாசலில் காத்திருந்தது தொடர்பான கேள்விக்கு...திமுகவை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் புரிந்து கொண்டது அவ்வளவுதான் என்பதை வெளிப்படுத்துகிறார்கள் எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், எப்பொழுதுமே இரண்டு மூன்று பேர் சேர்ந்து முடிவெடுக்க முடியாது அதேபோன்று முடிவெடுக்கக் கூடிய கட்சி திமுகதான் ஏனென்றால் அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதிமுக குடும்பம் என்பது மிகப்பெரியது என்றார்.
ஓபிஎஸ்யும் இபிஎஸ்ஸையும் இணைக்கக்கூடிய முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தொண்டர்கள் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றார். இரட்டை இலை சின்னத்தை எந்த ஒரு காலத்திலும் உயிருடன் இருக்கும் வரை எதுவும் செய்ய முடியாது என தெரிவித்தார்.
மேலும் அதிமுகவை மீண்டும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன் என கூறினார். வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அதிமுக ஒன்றிணையும் என்றார்.
” ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி வாய்ப்பு பற்றி நாம் எதுவும் கூற முடியாது மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். அதிமுக சிதறுண்டு இருப்பதற்கு காரணம் பாஜக என்ற கேள்விக்கு.. நாம் அடுத்தவரை குறை கூற தேவையில்லை நாம் சரியாக இருந்தால் போதும். என் நிழலிடம் கூட யாரும் வர முடியாது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் செய்யக்கூடிய நடவடிக்கைகள் அனைத்தும் திமுகவிற்கு சாதகமாக உள்ளது ஆகவே ஒருவரை ஒருவர் திட்டுவதை விட்டுவிட்டு இருவரும் ஒன்றிணைந்து திமுகவை நிறுத்துவதற்கு ஒன்றினைய வேண்டும் என்பதுதான் கட்சிதொண்டர்களின் வேண்டுகோள்” என தெரிவித்தார்.