2025 சஷ்டி விரதம் - என்ன வரம் வேண்டும் கேளுங்கள்?
கந்த சஷ்டி விரதம் அக்டோபர் 22ஆம் தேதி ஆரம்பிக்கிறது அக்டோபர் 27 ஆம் தேதி முடிவடைகிறது... பக்தர்கள் சஷ்டிக்கு முன்பாக அமாவாசைக்கு ஆரம்பித்து... சஷ்டிக்கு முடிப்பார்கள் ஆனால் பக்தியின் மிகுதியால் 48 நாட்கள் அதாவது செப்டம்பர் 10ஆம் தேதியே விரதத்தை ஆரம்பித்து சூரசம்காரத்தின் மறுநாள் திருக்கல்யாணத்தின் போது அவருடைய விரதத்தை முடித்துக் கொள்வார்கள்... இப்படியான சஷ்டி விரதத்தின் மிக அற்புதமான பலன்களை ஏற்கனவே பல லட்சக்கணக்கான மக்கள் அவருடைய வாழ்க்கையில் அனுபவித்து இருக்கிறார்கள்... என்பதை நேரடி சாட்சியங்களாகவே நம்மிடம் பகிர்ந்து இருக்கிறார்கள்.. சரி சஷ்டி... விரதம்... முருகர்... என்ன தொடர்பு என்று பார்க்கலாம்... போரிடும் பொழுது சூரபத்மனை வதமும் செய்து ஒருவரை சேவர் கொடியாகவும் மற்றொருவரை மயிலாகவும் மாற்றி தன்னிடமே அடைக்கலமாக வைத்துக் கொள்கிறார்... இப்படிப்பட்ட கருணையின் கடலான கந்தரை நாம் மனதார வழிபட்டு விரதமருந்து பிரார்த்தனை செய்தால் நம்மிடம் இருக்கக்கூடிய அகங்காரம், ஆணவம், அடிமைத்தனம், பொருளாதார விருத்தியின்மை, சந்ததி விருத்தியின்மை, கஷ்டம், கொடுமை, பிரச்சனை, வியாதி, போன்றவற்றில் இருந்து நம்மை முருகர் காத்தருளி ரட்சித்து விமோசனம் அளிப்பார் என்பது நிதர்சனமான உண்மை...
சரவணபவ என்ற மா மந்திரம் :
விரதமிருப்போர் காலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் முருகருக்கு அலங்காரம் செய்து நெய் தீபம் காட்டி மனதார வேண்டுதல்களை நீங்கள் அவர் பாதத்தில் வைக்கலாம்... அப்பொழுது சரவணபவ என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிப்பது மூலம் அவருக்கு மந்திர காணிக்கை செலுத்தி வேண்டும் வரத்தை பெற்றுக் கொள்ளலாம்... பேப்பரில் எழுதினாலும் உங்களுடைய அர்ப்பணிப்பு நிச்சயம் வீண் போகாது...108 முறை நீங்கள் சரவணபவ மந்திரத்தை எழுதி அவருடைய அனுக்கிரகத்தை பெறலாம்...
நோய் பிடியில் இருப்பவர்கள் இந்த மந்திரத்தை 108 முறை அல்ல 1008 முறை சொன்னாலும் ஒரு சனத்தில் நோயே இல்லாமல் செய்து விடுவார் முருகர்... இப்படியாக அவருடைய நாமத்தை சத்தமாக ஜெபித்தாலும் சரி மனதிற்குள் ஜெபித்தாலும் சரி பேப்பரில் எழுதினாலும் சரி... மனம் ஒருமனப்பட்டு எப்படி அவரை நினைத்தாலும் உங்களுக்கான வேண்டுதல் நிறைவேறும் என்பது முருகன் அருளும் வாக்கு...
கந்த சஷ்டி விரத முறைகள் :
செப்டம்பர் 10ஆம் தேதி ஆரம்பித்திருக்கும் 48 நாள் விரதத்தில் நீங்கள் கலந்து இருக்கிறீர்கள் என்றால் தினமும் தலைக்கு குளிக்க வேண்டிய அவசியம் இல்லை செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமைகளில் தலைக்கு நீராடி முருகரை வழிபடலாம் அதேபோல கோவிலுக்கு செல்ல முடிந்தவர்கள் கோவிலுக்கு செல்லலாம் வீட்டில் இருந்து அவரை ஜெபிப்பவர்கள் வீட்டிலிருந்து ஜெபிக்கலாம் பால் பழம் கற்கண்டு போன்றவற்றை நெய்வேத்தியமாக முருகருக்கு படைக்கலாம்....
உண்ணாவிரதம் இருப்பவர்கள் காலையிலிருந்து மாலை வரை முழுவதுமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை இடையில் பால் பழம் அருந்தலாம் சாப்பிடலாம் அதே போல உஷ்ணம் அதிகமாகும் என்பதால் அவ்வப்பொழுது தண்ணீரை மட்டும் குடித்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளலாம்.... இன்னும் சிலர் ஒரு பொழுது மட்டும் இருந்து மதியத்திற்கு மேல் உணவு அருந்துவார்கள் இப்படியாக உங்களால் என்ன முடியுமோ அவற்றை செய்தால் போதும் சஷ்டியின் மகிமையே அந்த திதியில் விரதம் இருப்பது அதுவும் உடலை வருத்திக் கொள்ளாமல் விரதம் இருப்பது முருகருக்கு உகந்தது...