கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாகப் பணியாற்றி வந்த சஞ்சீவ் பானர்ஜி, கடந்த ஜனவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்று கொண்டார். மேலும், இவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.


இந்தநிலையில், தீடிரென உச்ச நீதிமன்ற கொலீஜியம் மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜியை இடமாற்றம் செய்ய மத்திய அரசிடம் பரிந்துரை செய்தது. இதையடுத்து, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜியை இடமாற்றம் செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற கொலீஜியத்திற்கு மூத்த வழக்கறிஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர். மூத்த வழக்கறிஞர்கள் எழுதிய அந்த கடிதத்தில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜியை இடமாற்றம் செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறுகிய காலத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜியை இடமாற்றம் செய்வதற்கான தெளிவான விளக்கத்தை இதுவரை அளிக்கவில்லை. 




பெரிய நீதிமன்றங்களில் அதிக வழக்குகளை திறம்பட கையாண்ட அனுபவம் கொண்ட சஞ்சீவ் பானர்ஜியை மேகாலயா போன்ற சிறிய மாநில உயர்நீதிமன்றங்களில் அவரது அனுபவம் முழுமையாக பயன்படாது. எனவே, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜியை இடமாற்றம் செய்யும் முடிவை கைவிட வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர்கள் அரவிந்த் தத்தார், பி.எஸ். ராமன், நளினி சிதம்பரம், விஜய் நாராயணன் உள்ளிட்ட 31 மூத்த வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற கொலீஜியத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். 


அதன் அடிப்படையில் இன்று காணொலி காட்சி வாயிலாக சென்னை பார் கவுன்சில் சார்பில் அவசர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பி.எஸ்.ராமன், என்.ஜி.ஆர்.பிரசாத், வி.பிரகாஷ், பார்த்தசாரதி, ஜி.கார்த்திகேயன், ஆதிலட்சுமி லோகமூர்த்தி, ஷான் கட்டாரி வி.ஆர்.கமலநாதன் உள்ளிட்ட 92 பேர் கலந்து கொண்டனர். 


இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட 92 வழக்கறிஞர்களில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் இந்த தீர்மானத்தை ஏற்றதால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல், சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து  கொல்கத்தாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி சிவஞானம் இடம் மாற்றத்தையும் ரத்து செய்யக்கோரி அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


ஏற்கனவே, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலய உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வழக்கறிஞர்கள் 237 உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு கடிதம் எழுதி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண