தமிழ்நாட்டில் அதிக கட்டணத்திற்கு மணல் விற்கப்பட்டு வருவதாக அதிகளவில் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து இந்த மணல் விற்பனை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தமிழ்நாடு அரசு உறுதியளித்திருந்தது. மேலும் ஆற்று மணல் விற்பனையில் முறைகேடுகளை தடுக்க 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா வைத்து கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் இனிமேல் மணல் வாங்க விரும்புவோர் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு யூனிட் ஆற்று மணல் ஆயிரம் ரூபாய் என தமிழக அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. மணல் வாங்க விரும்புவோர் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை விண்ணப்பிக்கலாம். இந்த இணையதளத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு மணல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.