Petrol Bomb: பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம்..! 8 பேரை கைது செய்த காவல்துறை..!

சேலம் அம்மாபேட்டையில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணை குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Continues below advertisement

சேலம் அம்மாபேட்டையில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணை குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது வரை தமிழ்நாடு முழுவதும் 8 பேர் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

Continues below advertisement

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் அடுத்தடுத்த இடங்களில் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் குண்டுகள்  வீசப்பட்டுள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதன்படி, கன்னியாகுமரி பாஜக பிரமுகரும் தொழிலதிபருமான கல்யாண சுந்தரம் என்பவரது வீட்டில் முன்னதாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. அதேபோல், சேலத்தில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி ராஜன் என்பவரது வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை பற்றவைத்து வீசிச்சென்றனர். மதுரையில் அதிகாலை கிருஷ்ணன் என்பவரது வீட்டிலும் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

சேலம் மாநகர் அம்மாபேட்டை பரமக்குடி நன்னுசாமி தெருவில் வசித்து வருபவர் ராஜன். இவர் ஆர் எஸ் எஸ் அமைப்பின் சேலம் நகர மண்டல தலைவர் பொறுப்பில் உள்ளார். இன்று அதிகாலை ஒரு மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் ராஜன் வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை பற்றவைத்து வீசி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பாட்டில் சரியாக பற்றாத காரணத்தால் தீயினால் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதனிடையே இந்த சம்பவத்தை கண்ட எதிர்வீட்டு நபர் தியாகராஜன் என்பவர் ராஜனுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் ராஜன் வீட்டிற்கு வந்தனர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் மாடசாமி தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து சிசிடிவி கேமரா காட்சிகள் ஏதேனும் உள்ளனவா என்பதையும் சேகரித்து வருகின்றனர். 

இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் சையது அலி மற்றும் காதர் உசேன் இருவர் பெட்ரோல் குண்டு வீசியது உறுதி செய்யப்பட்டதால் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது தீ வைத்தல், நட்பெயருக்கு களங்கம் விளைவித்தல் மற்றும் மத நல்லினத்திற்கு எதிராக செயல்படுத்தல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சேலம் அம்மாபேட்டை காவல் நிலையம்முன்பாக பரபரப்பான சூழல் நிலவுகிறது. மேலும், ஐந்து பேரிடம் விசாரணை நடத்தி வந்தது. விசாரணையில் அவர்களும் குற்றச்செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டு, ஐந்து பேரும்ம் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சேலம் மாவட்டத்தில் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் மண்ணெண்ணை குண்டு வீசப்பட்ட சம்வத்தில் எழுவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அதேபோல், திண்டுக்கல் மாவட்டம் குடைபாறைப்பட்டியில்   பாஜக பிரமுகர் செந்தில் பால்ராஜின்  வாகனங்களுக்கு தீ வைத்த சம்பவத்தில் ஈடுபட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தொடர்ந்து பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் வீடு, அலுவலகம், வாகனங்கள் மீது தீ வைப்பு மற்றும் குண்டு வீச்சு சம்பவங்களால் தாக்குதலுக்கு உள்ளான பா.ஜ.க. நிர்வாகிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று பார்க்க உள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

Continues below advertisement
Sponsored Links by Taboola