இரண்டு மடங்காக உயர்ந்த ஊதியம்


அரசு ஊழியர்கள் தான் மக்களுக்கும்- அரசுக்கும் பாலமாக இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.  அந்த வகையில் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான ஊதியத்தை தேர்தல் ஆணையம் இரட்டிப்பாக்கியுள்ளது. வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர்களுக்கான ஊதியமும் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தேர்தல் ஒரு நாட்டிற்கு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கும் ஆயுதமாக உள்ளது.  எனவே தேர்தலில் வாக்களிப்பது வாக்காளர்களின் முதல் ஜனநாயக கடமையாக இருந்து வருகிறது. எனவே துல்லியமான வாக்காளர் பட்டியல்கள் ஜனநாயகத்தின் அடித்தளமாக உள்ளது.

Continues below advertisement


தேர்தல் ஆணையம் சூப்பர் அறிவிப்பு


அந்த வகையில் தேர்தல் பணியின் ஈடுபடும்  தேர்தல் பதிவு அதிகாரிகள், உதவி தேர்தல் பதிவு அதிகாரிகள், வாக்குச்சாவடி  மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி அதிகாரிகள்  முக்கிய அங்கம் வகிக்கிறார்கள். எனவே  வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதில் கடின உழைப்பை செலவிடுகிறார்கள். காலை முதல் மாலை வரை தினந்தோறும் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொண்டு சரியான வாக்காளர் பட்டியில் வெளியிடுவதில் முக்கிய பங்காற்றி வருகிறார்கள். 



வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி


இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணியில் 60ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றவுள்ளனர். எனவே  தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான வருடாந்திர ஊதியத்தை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளது. வாக்காளர் பட்டியல்களைத் தயாரித்தல் மற்றும் திருத்துவதில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளின் ஊதியத்தையும் உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. முதல் முறையாக தேர்தல் பதிவு அதிகாரிகள், உதவி தேர்தல் பதிவு அதிகாரிகளுக்கு கௌரவ ஊதியம் வழங்கப்படவுள்ளது. 


யாருக்கெல்லாம் ஊதியம் உயர்வு


இது தொடர்பாக வெளியாகியுள்ள அரசாணையில், வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியமான 6,000 ரூபாயை 12,000 ரூபாயாக  உயர்த்தப்படுகிறது. வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கான ஊக்கத்தொகை 1000 ரூபாயில் இருந்து  ரூ2000 ஆக உயர்த்தப்படுகிறது. வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுக்கான ஊதியம் ரூ12,000-லிருந்து ரூ 18,000 ஆக உயர்த்தப்படுகிறது. தேர்தல் பதிவு மற்றும் உதவி தேர்தல் பதிவு அதிகாரிகளுக்கு முறையே ரூ30,000 மற்றும் ரூ 25,000 என மதிப்பூதியம்  முதல் முறையாக வழங்கப்படவுள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.