விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,எம்.பி., குறித்து அவதூறாக பேசிய வழக்கில், பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராமுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த  காயத்ரி ரகுராமை 12 ஜூலை 2021 அன்று நேரில் ஆஜராகச் சொல்லி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

என்ன நடந்தது? 






ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவ்வாக இயங்கி வருபவர் நடிகரும் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினருமான காயத்ரி ரகுராம். அண்மையில் தனது ட்வீட் ஒன்றில் பொருளாதார பேராசிரியர் ஜெயரஞ்சன் எழுதியதாக ஒரு ஆய்வுக்கட்டுரை ஒன்றை முன்வைத்து வந்த ஃபார்வர்ட் குறித்து விமர்சனம் எழுப்பியிருந்தார் அவர். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனைக்  குறிப்பிட்டு அவதூறாகப் பேசியிருந்தார்.

இதையடுத்து இந்த விவகாரத்தில் அவதூறாகப் பேசியதாக அவருக்குத் தற்போது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.  மனு ஸ்மிருதி குறித்த சர்ச்சையில் ஏற்கெனவே திருமாவளவன் குறித்து காயத்ரி ரகுராம் அவதூறாகப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியோர் சதவிகிதம் உயர்வு..!