கள்ளக்குறிச்சி - சேலம் சாலையில் உள்ள வி.ஏ.எஸ் திருமண மண்டபத்தில் இருந்து ஆர்எஸ்எஸ் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் கடலூர், பெரம்பலூர் ஆகிய இடங்களிலும் ஆர்எஸ்எஸ் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 


பேரணிக்கு அனுமதி:


நவம்பர் 6 ஆம் தேதி, நிபந்தணையுடன் கூடிய பேரணிக்கு, உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. ஆனால், அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லவுள்ளதாக ஆர்.எஸ்.எஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், 6 ஆம் தேதி பேரணி நடத்தப்படாது எனவும் ஆர்.எஸ்.ஆர். தரப்பினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில் கள்ளக்குறிச்சி,கடலூர், பெரம்பலூர் ஆகிய இடங்களில் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது.  இப்பேரணியானது காவல்துறையின் பாதுகாப்போடு நடைபெற்று வருகிறது. பேரணியில், மத்தளம் உள்ளிட்ட இசையுடன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பேரணியாக சென்றனர்.




                                                       படம்: கள்ளக்குறிச்சி - சேலம் சாலையில் ஆர்எஸ்எஸ் பேரணி


பேரணி வழக்கு:


சட்டம் ஒழுங்கு பிரச்னையை சுட்டிக் காட்டி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு, அக்டோபர் 2ஆம் தேதி தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. இதனை அடுத்த ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்காததை எதிர்த்து உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. 


இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அக்டோபர் 2 ஆம் தேதிக்கு பதில் நவம்பர் 6-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. நவம்பர் 6-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்தால், காவல்துறை நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.


மேலும், தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு, நிபந்தனையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.






இதர 6 இடங்களில் மட்டும் இயல்பு நிலை திரும்பும்வரை ஆர்.எஸ்.எஸ். காத்திருக்க வேண்டும். இந்த 6 இடங்களில் 2 மாதங்களுக்கு பிறகு புதிய மனு கொடுக்கலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


மேல்முறையீடு:


இந்நிலையில், நிபந்தனையுடன் கூடிய அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக ஆர்.எஸ்.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், 6ஆம் தேதி (இன்று) பேரணி நடத்தப்படாது எனவும் ஆர்.எஸ்.எஸ். தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி,கடலூர், பெரம்பலூர் ஆகிய இடங்களில் பேரணி தொடங்கி நடைபெற்றது.