ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பை சுற்றுச்சுவருக்குள் நடத்த பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் மேல்முறையீடு செய்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி கோரினால் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கவும் காவல்துறைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 22, 29 ம் தேதிகளில் அணிவகுப்புக்கு அனுமதிகோரி விண்ணபிக்க இருப்பதாக ஆர்.எஸ்.எஸ் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோவை, பல்லடம், நாகர்கோவில் உள்ளிட்ட 6 இடங்களை தவிர்த்து 44 இடங்களில் சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பு நடத்தி கொள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தது.
இந்நிலையில், இன்று இந்த மனு விசாரணைக்கு வந்த நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், அணி வகுப்புக்கு அனுமதி கோரி ஆர்.எஸ்.எஸ். தரப்பில் விண்ணப்பித்தால் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை ஜனவரி 5ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.