அனைத்து கட்சி கூட்டத்திற்கு வந்தவர்கள் வீரர்கள். வராதவர்கள் பயந்தாங்கொள்ளிகள் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி விமர்சித்து பேசியுள்ளார்

Continues below advertisement

அனைத்து கட்சி கூட்டம்

தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில், தமிழகத்தில் நாளை மறுநாள் (நவம்பர் 3) இந்தப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

ஆனால், “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் தமிழக மக்களின் வாக்குரிமையை பறிக்கும் சதி திட்டம் இது” என்று குற்றம்சாட்டி, இதற்கு எதிராக போராட தீர்மானித்த தி.மு.க, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நவம்பர் 2-ந்தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்துவதாக அறிவித்திருந்தன.

Continues below advertisement

49 கட்சிகள் பங்கேற்பு

இதற்காக, மாநிலம் முழுவதும் உள்ள 60க்கும் மேற்பட்ட கட்சி தலைவர்களுக்கு கூட்டத்தில் பங்கேற்க அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது.சென்னையில் நடைபெற்ற இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் மொத்தம் 49 கட்சிகள் பங்கேற்றன. அழைப்பு விடுக்கப்பட்ட கட்சிகளில் தவெக, பாமக, நாதக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக உள்ளிட்ட கட்சிகள் கலந்துக்கொள்ளவில்லை

“இந்த SIR என்பது சாதாரண வாக்காளர் பட்டியல் திருத்தம் அல்ல. இது மறைமுகமாக தேசிய குடியுரிமை பதிவேடு (NRC) நோக்கி நகரும் முயற்சி. எனவே இதை கடுமையாக எதிர்க்கிறோம். தமிழ்நாட்டில் இதுபோன்ற மத்திய அரசின் மறைமுக நடவடிக்கைகள் நடக்க அனுமதிக்கமாட்டோம். இதற்காக தேவையானால் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்,”

வராதவர்கள் பயந்தாங்கொள்ளிகள்

"அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வராதவர்களை பற்றி கவலைப்பட தேவையில்லை. வந்தவர்களை வரவேற்கிறோம். அவர்களுக்கு ஜனநாயக உரிமை இருக்கிறது. அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வந்தவர்கள் வீரர்கள். வராதவர்கள் பயந்தாங்கொள்ளிகள். பாஜகவை எதிர்க்க பயந்தவர்கள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை. எனவே அவர்கள் வரவில்லை என்பது எங்களுக்கு ஆச்சரியமில்லை. தமிழ்நாடு மக்களின் நலனுக்காக நடக்கும் கூட்டத்தில் பங்கேற்காதது அவர்களின் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது,” என்று தெரிவித்தார்