பிளாஸ்டிக் பாட்டில்களின் தயாரிப்பு மூலப்பொருள்களின் விலை உயர்வால் தமிழகத்தில் மினரல் வாட்டர் கேன்களின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்..
தண்ணீரை விலைக்கொடுத்து வாங்குவதே பெருங்குற்றம் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தாலும், மினரல் வாட்டர்களின் பயன்பாடு அனைத்து பகுதிகளிலும் பரவிக்கொண்டிருக்கிறது. வீட்டிற்குப் பயன்படுத்துவது தொடங்கி அனைத்து விசேசங்களுக்கு மினரல் வாட்டரைத் தான் மக்கள் பெரிதும் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இப்படி மக்களின் தண்ணீர் தேவை அதிகரிக்க அதிகரிக்க தனியார் மினரல் வாடடர் ஆலைகளின் எண்ணிக்கைகளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக இந்தியாவில் இயங்கும் மொத்த ஆலைகளில் தமிழகத்தில் மட்டும் 18 சதவீதம் உள்ளது. எனவே இவர்களின் நிர்ணயிக்கும் விலையைத் தான் மக்கள் வாங்க வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட சூழல் தான் தற்போது தமிழகத்தில் உருவாகியுள்ளது. விலை தொடர்ந்து அதிகரித்தாலும் இப்போதுள்ள சூழலில் கட்டாயம் இதனை வாங்கி உபயோகிக்கக்கூடிய மனநிலையில் தான் உள்ளனர்.
இந்நிலையில் தான் இதுக்குறித்து தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் கதிர்ராசாரத்தினம் கூறுகையில், பிளாஸ்டிக் பாட்டில்களின் தயாரிப்பு மூலப்பொருள்களின் விலை உயர்வால், மினரல் வாட்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் தமிழகம் முழுவதும் 1568 குடிநீர் தயாரிப்பு நிலையங்கள் செயல்பட்டுவரக்கூடிய நிலையில், இதற்கான பாட்டில்கள், பாட்டில்கள், மூடிகள், கேன்கள், பேக்கிங் பொருள்கள், ஸ்டிக்கர்களை வெளியில் தான் வாங்கிவருகிறோம். முன்பு குறைந்த விலையில் கிடைத்த நிலையில் தற்போது இதன் மூலப்பொருள்கள் அனைத்தும் உயர்ந்துக் காணப்படுகிறது. இதனால் பிளாஸ்டிக் பாட்டில்களின் விலை 3 மாதங்களாக படிப்படியாக உயர்ந்து வந்தது. குறிப்பாக பாட்டில்களுக்கு ஒரே வாரத்தில் பாட்டிலுக்கு ரூபாய் 1 வரை உயர்ந்துள்ளதாக குடிநீர் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் இதனால் 300 மிலி தண்ணீர் பாட்டிலின் விலை 3.50 ரூபாயிலிருந்து 4.20 ரூபாயாகவும், 500 மிலி பாட்டில்கள் 4.50 ரூபாயிலிருந்து 5.10 ரூபாயாகவும், 1 லிட்டர் பாட்டில் 15 கொண்ட பேக்கிங் 110 ரூபாயிலிருந்து 120 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் தற்போது அதிகரித்து வரும் டீசல் விலை உயர்வால், வீடுகளுக்கு குடிநீர் கேன்களை எடுத்துச்செல்லும் வாகனங்களின் எரிபொருள் செலவு அதிகரித்துள்ளது. இதனால் 25 லிட்டர் கேன்களின் விலையை விநியோகஸ்தர்கள் அதிகரித்துள்ளனர். குறிப்பாக ஏரியாவுக்கு ஏற்றப்படி கேன்களின் விலை 25 முதல் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் எரிபொருள்களின் விலை உயர்வால் ஏரியாக்களில் விற்பனை செய்யப்பட்டு வந்த கேன்கள் இனி மேல் 30 முதல் 35 ரூபாய் வரை அதிகரிக்கும் என விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். இத்தனை நாள்களாக 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கேன்கள் தற்போது அதிகரித்துள்ளதால், மொத்தமாக வாங்கி உபயோகிக்கும் போது மக்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடும். ஆனால் என்ன விலை உயர்வு ஏற்பட்டாலும் இதனை உபயோகித்த மக்கள் கட்டாயம் வாங்கத்தான் செய்வார்கள்….