அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே உங்களுடைய ராசியில் சந்திரன் உச்சம் அடைகிறார் சுக்கிரன் ஆட்சி பெறுகிறார் சொல்லவா வேண்டும் காதல் என்றாலே சந்திரன் தானே கவிதைத்துவமாய் காதலிப்பதில் வல்லவர்கள்... காதலாய் காற்றில் கரைந்து கீதம் பாடி விரும்பிய பாடல்களை கேட்டு காதல் வானில் சிறகடித்து பறக்கும் உங்களுக்கு காதலைப் பற்றி சொல்லித் தரவா வேண்டும்....
எந்த வயதினர் ஆனாலும் காதலுக்கு கண் இல்லை என்பது போல, நீங்கள் காதலியாய், மனைவியாய் உங்களுடைய வாழ்க்கை துணை காதலனாய் கணவனாய் எப்படி இருந்தாலும்... காதல் ரசம் சொட்ட சொட்ட... அவர்களை ஆசை தீர காதலிப்பீர்கள்... விருந்தினர்கள் இருக்கிறார்கள் கூச்சப்பட்டு ஓரமாய் நிற்பது இல்லை... அனைவர் முன்னிலையிலும் உங்கள் வாழ்க்கை துணையை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதை கூச்சப்படாமல் வெளிப்படுத்துவீர்கள்... நிலவைப் பார்த்து நீ தான் அது, என்றாலும் நிலவே நீ தான் என்றாலும், உங்களுடைய வாழ்க்கைத் துணையோ அல்லது நீங்கள் நேசிப்பவரோ, நீங்கள் கூறும் கவிதைக்கு அடிமையாய் மாறுவார்கள்... கழுகுக்கு பறக்க சொல்லித்தர தேவையில்லை என்பது போல... உங்களுக்கு நேசிக்க சொல்லித் தர தேவையில்லை... ரிஷபத்திற்கு மூன்றாம் அதிபதி சந்திரன் ராசியிலேயே உச்சம் பெறுவதால் தைரியமாய் கலை நயத்துடன் ஓவியமாய் படங்கள் வரைந்து ரோஜாப்பூ மலர் போல விரும்பியவற்றை வாங்கி கொடுத்து... சாக்லேட் கிப்ட்ஸ் என்று உங்களுடைய காதலை நீங்கள் வெளிப்படுத்தும் விதமோ அப்பப்பா... எதிர் முனையில் இருப்பவரை திக்கு முக்காட வைத்து விடும். ஒரு வாரத்திற்கு அவர்கள் நினைவில் இருந்து நீங்கா இடம் பிடிக்கும் அளவிற்கு சிம்மாசனம் போட்டு அமர வைத்து விடும்...
இப்படி உருகி உருகி காதலிக்கும் உங்களுக்குத்தான் டென்ஷனான வாழ்க்கைத் துணை சில சமயங்களில் அமைவது உண்டு... ஆனாலும் பொறுமைசாலிகள்... நீங்கள் எவ்வளவு பக்குவமாய் பொருத்து போக வேண்டுமோ அவ்வளவுக்கும் அட்ஜஸ்ட் செய்து போவீர்கள்... அப்படி நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு விட்டுக் கொடுக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு காதலிப்பவரின் மனதில் அச்சாணி போல ஆழமாய் அமர்ந்திருப்பீர்கள்... எது காதல் என்ற விளக்கம் யாரிடமாவது கேட்க வேண்டும் என்றால்? ரிஷப ராசி இடம் போய் கேளுங்கள் என்று சொல்லும் அளவிற்கு ஒரு டிக்ஷனரியை உருவாக்கி வைத்திருப்பீர்கள்.... டைரி எழுதுவது உங்களுக்கு மிகவும் பிடிக்கும் அதுவும் உங்கள் வாழ்க்கை துணையை பற்றி பக்கம் பக்கமாய் எழுதி தள்ளி இருப்பீர்கள்...
எழுதி எழுதி நோட்டுக்கள் தீர்ந்து போனதுதான் மிச்சம்... ஒரு கட்டத்தில் வாழ்க்கை திரும்பி பார்க்கும் பொழுது நீங்கள் எழுதிய வரிகள் பசுமரத்தணியாய் நீங்கள் காதலிப்பவரின் மனதில் அப்படியே ஒட்டிக் கொண்டிருக்கும்... ராசி அதிபதி சுக்கிரன் காதலிப்பவரை சர்ப்ரைஸ் செய்ய வேண்டும் என்று நினைத்தால் உங்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை... எந்த இடம் சிறந்தது எங்கே அழகாக இருக்கும் எது அழகாக இருக்கும் என்பது போன்ற இடங்களை சிறப்பாக தேர்வு செய்து அந்த இடத்திற்கு உங்களுடைய வாழ்க்கை துணையை ஆச்சரியப்படுத்துவீர்கள்....
எங்கே உங்களுக்கு சிக்கல் வரும் வாழ்க்கை துணை சம்பந்தப்பட்ட அல்லது காதலிக்கும் நபர்களின் சம்பந்தப்பட்ட உறவினர்களோ உற்றத்தார் சுற்றத்தாறு உங்களை அவர்களுடைய இல்லத்தில் ஏற்றுக்கொள்வதில் சற்று சிரமப்படுவார்கள்... அன்பான உங்களை வீட்டுக்குள் விட்டால் நிச்சயம் வீடு... உங்கள் பக்கம் தானே நிற்கும் அப்படிப்பட்ட பயமும் கூட சில சமயங்களில் இருக்கலாம் ஆனால் சாதகமான உங்களுடைய முகமோ உங்களுடைய புண் சிரிப்போ அனைவரையும் வசீகரித்து விடும்....
ரிஷப ராசி பொருத்தவரை நீங்கள் விரும்பிய நபர் வாழ்க்கையின் எந்த மூலைக்கு சென்றாலும் எத்தனை தூரத்திற்கு சென்றாலும் நீங்கள் கொடுத்த அன்பை நிச்சயம் அடிக்கடி நினைத்து பார்த்து உங்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள் அதுதான் உங்களுடைய வெற்றி....