வருவாய் ஆய்வாளர் உட்பட 2 பேர் தற்கொலை.




 


கரூர் நொய்யல் பகுதிகளில் நடந்த வெவ்வேறு சம்பவத்தில் வருவாய் ஆய்வாளர் உள்பட இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்டனர்.


கரூர் மாவட்டம், மன்மங்கலம் தாலுக்கா அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சரவணன். இவரது சகோதரி சாருமதியின் கணவர் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் உடல் நலம் சரியில்லாமல் இறந்து விட்டார். இதனால் சரவணன் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று சரவணன் வாங்கல் கணக்குப்பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து சரவணன் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




 


நொய்யல் அருகே குறுக்கு சாலை பங்களா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவப்பிரகாஷ். இவரது மனைவி சர்மிளா. இவர்களுக்கு திருமணம் ஆகி அகிலேஷ் என்ற மகனும், 6 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளன. இந்நிலையில் இரண்டாவது பிறந்த பெண் குழந்தை குறையை பிரசவத்தில் பிறந்ததால் அந்த குழந்தைக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்தது. குழந்தையை மருத்துவமனைக்கு கூட்டிச் செல்வது மற்றும் பராமரிப்பதில் அடிக்கடி கணவன், மனைவியிடையே குடும்ப தகராறும், வாக்குவாதமும் ஏற்பட்டு கொண்டிருந்தது. குடும்பத்தில் உள்ளவர்கள் முதல் குழந்தையுடன் ஷர்மிளாவை சரியாக பேசவிடவில்லை என்று கூறப்படுகிறது இதனால் சர்மிளா வீரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் இரவு அறையில் தனியாக இருந்த சர்மிளா மின்விசிறியில் தூக்கில் தொங்கினார்.




 


இதைக்கண்ட அவரது குடும்பத்தார் ஷர்மிளாவின் தங்கை ஹரிப்பிரியாவுக்கு தகவல் கொடுத்தனர். இதை அடுத்து ஹரிபிரியா மற்றும் உறவினர்கள் சர்மிளாவை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதை அடுத்து ஹரிப்பிரியா தனது சகோதரியின் சாவில் சந்தேகம் இருப்பதாக வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். ஷர்மிளாவுக்கு திருமணம் ஆகி சில ஆண்டுகளே ஆவதால் கரூர் கோட்டாட்சியரும் விசாரணை நடத்த உள்ளார்.


இருசக்கர வாகன விபத்து வாலிபர் உயிரிழப்பு.


குளித்தலை அடுத்த,  இடையப்பட்டி பஞ்சாயத்து கொண்டப்ப நாயக்கனூரைச் சேர்ந்தவர் முருகேசன், கூலித்தொழிலாளி. இவர் ஹீரோ ஹோண்டா ஸ்ப்லெண்டர் பைக்கில், தனது நண்பரான அரவாக்குறிச்சி அருகே, பாறையூர் சேர்ந்த சிவக்குமாரை, ஏற்றிக்கொண்டு தரகம்பட்டி கடவூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். இடையப்பட்டி, வாத்தியார் களம் அருகே சென்ற போது நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த இருவரையும் அப்பகுதியினர் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிவக்குமார் ஏற்கனவே இறந்துவிட்டார், என்பது தெரிய வந்தது. முருகேசன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். சிவக்குமார் மனைவி ராணி, கொடுத்த புகாரின் படி, பாலவிடுதி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.