கரூரில் அரசு திட்ட பெயர் பலகையில் இருந்த ஆங்கில எழுத்து பிழை குறித்து ட்விட்டர் மூலம் கோரிக்கை வைத்த 24 மணி நேரத்தில் சரி செய்து பதில் ட்வீட் கொடுத்துள்ளார் ஆட்சியர் பிரபு சங்கர்.




கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளியணை ஊராட்சியில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திட்டம் சம்பந்தமான கட்டிடத்தின் பெயர் பலகையில்,




PLASTIC WASTE MANAGEMENT  என்ற ஆங்கில வார்த்தையில் "MENAGEMENT" என்ற வார்த்தையில் இருந்த பிழையை குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியருக்கு "Karur Tweet" என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. 




இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் 24 மணி நேரத்தில் ஆங்கில எழுத்தில் இருந்த பிழை சரி செய்யப்பட்டதாக, ட்விட்டர் மூலம் பதிலளித்தார். "MANAGEMENT" என்று சரிசெய்யப்பட்ட புகைப்படம் குறித்த ஆட்சியரின் பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண