Tribute to Muthulakshmi Reddy: பெண்களின் உரிமை, வளர்ச்சி, முன்னேற்றம்... போராடிய முதல் பெண்மணி முத்துலட்சுமி ரெட்டி
வி.ஆர். மகாத்மா காந்தியின் தகவல் தொடர்பு உத்திகள் குறித்து முனைவர் பட்டம் பெற்ற தேவிகா திருமதி. முத்துலட்சுமி ரெட்டி அவர்களை பற்றி கூறுகையில் அறுவைசிகிச்சை மற்றும் பெண்களின் உரிமைகளில் ஒரு டிரெயில்பிளேசர் என்றார். பெண்களுக்கான ஒரு முன்னேற்ற பாதையை தொடங்கி வைத்தவர் முத்துலட்சுமி ரெட்டி. அவரது பிறந்தநாள் நேற்று. (ஜூலை 30, 1886-ஜூலை 22, 1968). புதுக்கோட்டையில் உள்ள ஆண்களுக்கான பள்ளியான மகாராஜா பள்ளியின் முதல் பெண் மாணவி, சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல் இந்திய பெண் அறுவை சிகிச்சை நிபுணர், பெண்கள் இந்திய சங்கத்தின் முதல் இந்திய உறுப்பினர், c செவிலியர்களுக்காக, பெண் கல்விக்காக, விதவை மறுமணம், பெண்களுக்கு சம சொத்துரிமை, கல்விச் சீர்திருத்தம், பெண்களுக்கான சுகாதாரம், இளம் பெண்களை தேவதாசிகளாக அறிவிக்கும் வழக்கத்தை ஒழிக்கவும் மற்றும் கிராமப்புற பெண்களுக்காகவும் போராடியவர் முத்துலட்சுமி அவர்கள். '
ஆரம்பத்தில் முத்துலட்சுமி உள்ளூர் பள்ளியில் சேர்க்கப்பட்டார் பிறகு மேற்கொண்டு படிப்பதற்காக பயணித்த போது அவரின் மாட்டுவண்டியின் பின்னால் சிறுவர்கள் தேவதாசி பள்ளிக்கு செல்கிறாள் என்று அலறியபடி ஓடினர். புதுக்கோட்டையில் ஆண்களுக்கான உயர்நிலைப் பள்ளி மட்டுமே இருந்தது. அங்கு பயின்ற 40 சிறுவர்கள் மற்றும் மூன்று பெண்களுக்கு இடையில் திரை விரிக்கப்பட்டு இருந்தது. ஏனெனில் தேவதாசி பெண் தங்களுது மகன்களின் மனதை மாற்றிவிடுவாள் என பல சிறுவர்களின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளியில் இருந்து விலகி விடுவதாக மிரட்டியுள்ளனர். ஒரு ஆசிரியர் பள்ளியில் இருந்து ராஜினாமாவும் செய்தார். ஆனால், புதுக்கோட்டை மகாராஜா முத்துலட்சுமிக்கு ஆதரவாக இருந்தார்.
மெட்ராஸில் மருத்துவம் படிக்க விருப்பம் தெரிவித்தபோது, புதுக்கோட்டை மகாராஜா 150 ரூபாய் உதவித்தொகையாக முத்துலெட்சுமிக்கு வழங்கினார். மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் அவர் அறுவை சிகிச்சை பிரிவை தேர்ந்தெடுத்தபோது ஒட்டுமொத்த கல்லூரியுமே அதிர்ச்சி அடைந்தது. பெண்கள் ரத்தத்தை பார்த்தால் தாங்கமுடியாமல் மயக்கமடைந்து விடுவார்கள், அதை தாங்க மாட்டார்கள் என்ற கருத்தை மாற்றி அமைத்து பிடிவாதமாக இருந்து, நான்கு வருடங்கள் முடித்து மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியின் முதல் இந்திய பெண் அறுவை சிகிச்சை நிபுணரானார் முத்துலட்சுமி.
ஏழை மற்றும் ஆதரவற்ற பெண்களுக்காகஅவ்வை இல்லத்தை முத்துலட்சுமி நிறுவினார். அவரின் 136வது பிறந்தநாளை ஒட்டி இந்த மோனோகிராஃப் விவரிக்கிறது. இங்கு ஆயிரம் கணக்கான பெண்கள் பட்டம் பெற்று தங்களது சொந்த கால்களில் நின்றனர். தேவதாசி சமூகத்தைச் சேர்ந்த பலர் மற்றும் ஆயிரம் கணக்கான ஏழை பெண்களும் இந்த நிறுவனம் மூலம் பட்டம் பெற்றனர். இசை, நாட்டியமும் இங்கே கற்பிக்கப்பட்டது. சட்டபூர்வமாக பெண்களின் திருமண வயதை அதிகரிக்க வேண்டும், தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என்ற அவரது போராட்டத்திற்கு உயர்சாதி மற்றும் உயர் வர்க்க ஆண்கள் தங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். 17 வருட போராட்டத்திற்குப் பிறகு தான் அவருக்கு வெற்றி கிடைத்தது.
மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணராக தனது வாழ்க்கையை வெற்றிகரமாக துவங்கிய பிறகு சென்னை அடையாறில் புற்றுநோய் நிறுவனத்தை நிறுவினார். தன் தங்கை புற்றுநோயால் இறந்த போனது தான் அதற்கான சிகிச்சை அளிக்க நிபுணத்துவம் பெற வேண்டும் என்று முடிவு செய்தார். முத்துலட்சுமி பற்றி மோனோகிராஃப் எழுத உங்களை எது தூண்டியது என்று தேவிகாவிடம் கேட்டபோது அவர் கூறியது "அவ்வை இல்லத்தில் தன்னார்வலராகப் பணிபுரிவதும், தேவதாசி குடும்பத்தை தங்களின் பரம்பரை என்று மறைக்கும் பெண்கள் முத்துலட்சுமியை தெய்வமாகக் கருதும் பல பெண்களிடம் பேசியதும் மேலும் அவரிடம் இருக்கும் நற்குணங்களை வாழ்க்கையை மேற்கோள் காட்ட முடிவு செய்தது தான் காரணம் என்றார்.