அமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைவு.
அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு, 358 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு இருந்தது. காலை 6 மணி நிலவரம் படி 200 கன அடியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 71.56 அடியாக இருந்தது .அமராவதி அணைக்கு காலை வினாடிக்கு 419 கன அடி தண்ணீர் வந்தது.
மாயனூர் கதவனை
கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு, 4,225 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கும் 3,197 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. காவிரி ஆற்றில் குடிநீர் தேவைக்காக அந்த தண்ணீர் முழுவதும் திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
ஆத்துப்பாளையம் அணை
கரூர் மாவட்டம் கா. பரமத்தி அருகே கார்வழி ஆத்துப்பாளையம் அனைக்கு காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு, 17 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 14.46 அடியாக இருந்தது. நொய்யில் பாசன வாய் காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.