தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தீவிர கனமழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று தமிழ்நாடு முழுவதும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. அதேபோல இன்றும் ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக டிஜிபி பேரிடர் மீட்புப் படையை தமிழகம் முழுவதும் அனுப்பக்கோரி தகவல் அனுப்பியுள்ளார்.


ரெட் அலர்ட்


தமிழ்நாட்டில் இன்று தீவிரமாக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனவே மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



கடுமையான மழை


இந்நிலையில் இன்று தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குற்றால அருவிகளில் குளிக்க 4ஆவது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒகேனக்கல், மேட்டூர் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்: அடுத்த 48 மணிநேரத்தில் அதிரடிகாட்ட இருக்கும் மழை.. 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!


பேரிடர் மீட்புகுழு அனுப்பிவைப்பு


இந்த நிலையில் தமிழக போலீஸ் டிஜிபி தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படைக்கு ஒரு செய்தியை அனுப்பி உள்ளது. வானிலை ஆய்வு மையம் தமிழகம் முழுமைக்கும் ரெட் அலர்ட் கொடுத்துள்ளதால், கடுமையான மழையினால் பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படைக்கு இந்த செய்தியை அனுப்பி உள்ளது. 



டிஜிபி வலியுறுத்தல்


இந்நிலையில் தமிழக டிஜிபி, தமிழக பேரிடர் மீட்புப்படைக்கு அனுப்பிய செய்தியில், "வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளதால், உணவு, டார்ச் லைட், ரெயின் கோட், மரம் வெட்டும் கருவிகள் மற்றும் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்கு செல்லவேண்டும்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில் ஆவடி கமிஷனரேட்டில் உள்ளவர்களை திருச்சிக்கு அனுப்பவும், உளுந்தூர்பேட்டை மாற்றும் பூந்தமல்லி சப்ஜெயிலுக்கு அனுப்பப்பட்ட செய்தியில் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு செல்லவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. செல்லும் குழுவினர் கோவிட்-19 பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றும் பின்குறிப்பிடப் பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.