கரூர் பழைய நீதிமன்ற வளாகத்தில் சமரச நாள் விழிப்புணர்வு  ஊர்வலத்தை மாவட்ட நீதிபதி சண்முகம் சுந்தரம் தொடங்கி வைத்தார். சமரச நாள் தமிழ்நாடு மாநில சமரச மையத்தின் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10-ந் தேதி சமரச நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கரூர் மாவட்ட சமரச மையம் சார்பில்  சமரச நாள் கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி ஐந்து ரோடு பகுதியில் உள்ள பழைய நீதிமன்ற வளாகத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதனை மாவட்ட நீதிபதி சண்முகம் சுந்தரம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.


ஊர்வலமானது ஐந்து ரோடு பழைய நீதிமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கி அண்ணா வளைவு, நால்ரோடு, ஜவகர்ப ஜார், மாரியம்மன் கோவில் மற்றும் அரச மரத்து ரோடு வழியாக வந்து மீண்டும் பழைய நீதிமன்ற வளாகத்தில் நிறைவடைந்தது. இது தவிர ஆட்டோ மூலமாக சமரச மையத்தின் பணிகள் மற்றும் சமரசம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.   கலந்து கொண்டவர்கள் ஊர்வலத்தில் கரூர் மகிலா விரைவு நீதிமன்ற அமர்வு நீதிபதி நசீமா பானு,




 


தலைமை குற்றவியல் நடுவர் ராஜலிங்கம். முதன்மை சார்பு நீதிபதி கோகுல் முருகன், கூடுதல் சார்பு நீதிபதி பாரதி, மாவட்ட சமரச மைய செயலாளர் பாக்கியம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி மகேந்திரா வர்மா, கூடுதல் மாவட்ட உரிமைகள் நீதிபதி உமா மகேஸ்வரி, நீதித்துறை நடுவர் எண் 1 அம்பிகா, விரைவு நீதிமன்றம் நீதித்துறை நடுவர் நித்தியா மற்றும் வக்கீல்கள் சங்க நிர்வாகிகள், வக்கீல்கள், கல்லூரி மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நேற்று தொடங்கிய இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வருகிற 13-ந் தேவிவரை கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களிலும் நடைபெற உள்ளது.


கரூர் மாநகராட்சியில் பொதுமக்கள் கோரிக்கைகள் மற்றும் புகார்களுக்கு தீர்வு காணும் வகையில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை வழங்கினர்.


கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வார்டு 1 முதல் 48 வரை உள்ள பகுதிகளில் கட்டிட உரிமம் பெறுதல், புதிய சொத்துவரி, காலியிட வரி, தொழில் வரி விதிக்கவும், சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணம் பெயர் மாற்றம் செய்யவும், பிறப்பு, இறப்பு சான்று பெறவும், புதிய குடிநீர் இணைப்பு பெறவும், குடிநீர் இணைப்பு மற்றும் தெரு விளக்கு சம்மந்தமான புகார்களுக்கு தீர்வு காணுதல் மற்றும் பொதுமக்களின் குறைகளை தீர்வு காணுதல் தொடர்பாக சிறப்பு முகாம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. 


 




 


மேயர் கவிதா கணேசன் தலைமையில், மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்கள் தொடர்பான மனுக்களை நேரடியாக மாநகராட்சி மேயர் இடம் வழங்கினர் பொதுமக்கள் தரப்பில் கொடுக்கப்படும் மாநகராட்சி தொடர்பான கோரிக்கைகள் உடனுக்குடன் தீர்வு காணும் வகையிலும் வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறை சார்ந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மாநகராட்சி மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு உடனடி தீர்வு காணும் வகையில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.