கொரோனா நோய்த்தொற்று பரவலை தவிர்ப்பதற்காக தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு மே 24-ஆம் தேதி அதிகாலை முதல் அமலில் இருக்கும் சூழலில், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும் மளிகை கடையும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் தமிழக அரசு தற்போது ரேஷன் கடைகளை திறக்க உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களான அரிசி, சர்க்கரை மற்றும் நிவாரண நிதியாக வழங்கப்படும் ரூபாய் 2 ஆயிரம் ஆகியவற்றை மக்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் காலை 8 மணி முதல் 12 மணி ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு, விநியோகம் நடைபெறும் என உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. 


தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவின் அடிப்படையில் - உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி,



  • உணவுத்துறை பணிகளில் ஈடுபடும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் உட்பட அத்தியாவசிய பணிகளுக்கு பயணிக்க நேரிடும் அலுவலர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கப்படும்.

  • குடும்ப அட்டைதாரர்களின் நன்மையைக் கருதி அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பால் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் விநியோகத்தை செயல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அறிவுரை.

  • பொதுமக்கள் அனைவரும் இந்த திட்டத்தை உரிய பாதுகாப்பு முறைகளை பயன்படுத்தி முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வாங்கி செல்லவேண்டும்

  • பொதுமக்களின் நலன் கருதி அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த அறிவிப்பை பாதுகாப்பு எச்சரிக்கை உணர்வுடன் அனைவரும் அணுகவேண்டும்.