ராணிபேட்டை நகராட்சி காரை புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவர் அந்தப்பகுதியில் சைக்கிள் பழுதுபார்க்கும் கடை வைத்திருந்தார். இவரது மனைவி குண சுந்தரி. இவர்களுக்கு விக்னேஷ், ரமேஷ் என்ற இருமகன்கள் இருந்தனர். இதில் விக்னேஷ் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ரமேசுக்கும் கொளத்தூரைச் சேர்ந்த காயத்ரி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், திருமணம் நடைபெற்ற நிலையில், கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருதாக சொல்லப்படுகிறது. இவர்களுக்கு லோகிதா என்ற மகள் உள்ளார். இதனிடையே குடும்பபிரச்சினை காரணமாக மன வருத்ததில் இருந்த ரமேஷ் நேற்று முன்தினம் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் தூங்கச் சென்ற ரமேஷ் வீட்டின் முன்பகுதியில் இருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
![ABP News Ranipet Suicide Case: மகன் இறந்த துக்கம்.. உடல் அருகிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெற்றோர்.. நெஞ்சை அடைக்கும் சோகம்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/03/85132c963615302bf9dfa78ea2b6c465_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அவரது உடலை பார்த்த ரமேஷின் பெற்றோர் பன்னீர்செல்வம் மற்றும் ரமேஷ் கதறி அழுதனர். மகனை இழந்து சோகத்தில் இருந்த அவர்கள் தற்கொலை செய்யவும் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து மகனை கீழே இறக்கிய பெற்றோர் பக்கத்திலேயே சேலை கொண்டு தாங்களும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ராணிபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன்ர்.