பிரதமர் மோடி, பாம்பன் ரயில் பாலத்தை பயன்பாட்டிற்காக திறந்து வைக்க ஞாயிற்றுக்கிழமை ராமேஸ்வரம் வருகை தருகிறார். மேலும், அதே நேரத்தில் ராமேஸ்வரம் முதல் தாம்பரம் வரை செல்லக்கூடிய, புதிய பயணிகள் ரயிலையும் தொடக்கி வைக்கிறார். இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை( ஏப்ரல் 6 ) வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலை பார்ப்போம்.

Continues below advertisement

ஏப்ரல் 6- வானிலை:

தமிழ்நாட்டின் வானிலை தொடர்பாக அடுத்த சில தினங்களுக்கு வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது ,“ ஞாயிற்றுக்கிழமை ( ஏப்ரல் 6 ) தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய ( மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் ) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 அதே சமயத்தில் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Continues below advertisement

07-04-2025 முதல் 11-04-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Also Read: ராமேஸ்வரம்-தாம்பரம் ரயில் எந்த ஸ்டேசனில் நிற்கும்: கொடியசைக்கும் பிரதமர் மோடி!

சென்னை வானிலை:

சென்னையை பொறுத்தவரை, ஞாயிற்றுக் கிழமை (06-04-2025), வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.