Mysore Sandal Millennium Soap: மைசூர் சாண்டல் நிறுவனம் தனது பிரீமியம் ரக சோப்பை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த சோப்புகள் அதிகளவு வெளிநாட்டுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இளம் தலைமுறைகளை கவரும் வகையில், இந்த புதுவிதமான சோப் இருக்கும் என அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சோப் சந்தை
இந்தியா சந்தையில் அதிகளவு சோப்புகள் குவிந்திருக்கின்றன. இயற்கை சோப்பு முதல் பல்வேறு வாசனை திரவியங்கள் கலந்த சோப்புகள் வியாபாரம் படு ஜோராக நடைபெற்று வருகிறது. சந்தையில் பல்வேறு பிராண்டுகள் இருந்தாலும், பழைய பிராண்ட் சோப்புகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் எப்போதுமே இருந்து கொண்டு தான் இருக்கிறது.
அந்த வகையில் மைசூர் சாண்டல் சோப், பலருக்கும் பிடித்த ஒன்றாக இருந்து வருகிறது. மைசூர் சாண்டல் சோப், 1916-ம் ஆண்டு தொடங்கப்பட்ட மைசூர் சாண்டல் சோப் நிறுவனம் முதலில் சந்தன எண்ணெய்யைத் தயாரித்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.
மைசூர் சாண்டல் சோப்
ஆனால் முதல் உலகப்போரின் காரணமாக ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சந்தன சோப் உருவாக்கும் நிறுவனமாக மாற்றப்பட்டது. 1980 ஆம் ஆண்டு மைசூர் சாண்டல் சோப் நிறுவனம், கர்நாடக அரசின் பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்டது. மைசூர் சாண்டல் சோப் தென்னிந்தியா மற்றும் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலம் அடைந்த சோப்பு நிறுவனமாக இருந்து வருகிறது.
தொடர்ந்து இந்த நிறுவனம் 42, விதமான பொருட்களையும் தயாரித்து வருகிறது. இளம் தலைமுறைநேரை கவரும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதேபோன்று வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய பிரீமியம் ரக சோப்புகளையும் தயாரித்து வருகிறது. வெளிநாட்டுச் சந்தைகளில் பிரீமியம் ரக சோப்புகள் நல்ல வரவேற்பு கிடைப்பதால், புதிய பிரிமியம் ரக சோப்புகளை களம் இறக்க மைசூர் சென்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மைசூர் சாண்டல் மில்லினியம் சூப்பர் பிரீமியம் சோப்
அந்த வகையில் மைசூர் சென்டர் நிறுவனம், "மைசூர் சாண்டல் மில்லினியம் சூப்பர் பிரீமியம் சோப் " என்ற புதிய சோப்பை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பிரீமியம் ரக சோப், அதிக அளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டம் தீட்டி உள்ளது. 150G எடை கொண்ட இந்த சோப், 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. வெளிநாட்டு சந்தைகளில் இந்த சோப் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சோப் முழுக்க முழுக்க தூய, சந்தன எண்ணெயில் தயாரிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.