ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை 144 தடை விதித்துள்ளதால் வெளிமாவட்ட வாகனங்கள் அனுமதியின்றி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.


 எதனால்? 


இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் குருபூஜை தினத்தையொட்டி இரு மாதங்களுக்கு 144 தடை விதித்து மாவட்ட ஆட்சியர் ஜீத் சிங் காலோன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 


தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகப் போராடிய இம்மானுவேல் சேகரன், 1956-ம் ஆண்டு முதுகுளத்தூரில் நடந்த சாதிக் கலவரத்தை தொடர்ந்து நடந்த சமாதானக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், 1957ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதியன்று வெட்டிக் கொல்லப்பட்டார். இதையடுத்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் பரமக்குடியில் ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.வரும் செப்டம்பர் மாதம்  11 ஆம் தேதி  இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.




படம்: இமானுவேல் சேகரன்


இதையடுத்து, அக்டோபர் 30 ஆம் தேதி, 1908 ஆம் ஆண்டு பிறந்த சுதந்திர போராட்ட வீரரான முத்துராமலிங்கத் தேவர் 1963 ஆம் ஆண்டு  மறைந்தார்.


 அவரின் பிறந்த தினம் மற்றும் மறைவு தினம் அக்டோபர் 30 ஆம் தேதி ஒரே தினம் என்பதால் தேவர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. 




படம்: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 


இந்நிலையில் வரும் 9 ஆம் தேதி முதல்  செப்டம்பர் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி 144 தடை உத்தரவை ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.


இரு நபர்களும் சமூகத்திற்கு போராடி இருந்தாலும், சாதி தலைவர்களாக சிலர் அடையாளப்படுத்துகின்றனர். இந்த நிலையில் நினைவு தினம் , ஜெயந்தி தினத்தையொட்டி ஏதும் பிரச்னை ஏற்பட்டு விடக்கூடாது என முன்னெச்சரிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


உத்தரவு:


இதனால், ராமநாதபுரம் மாவட்டத்திற்குள்,  வெளி மாவட்ட வாகனங்கள் அனுமதியின்றி நுழைய தடையானது விதிக்கப்பட்டுள்ளது. 


இதையடுத்து ஊர்வலம் மற்றும் பேரணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குருபூஜை மற்றும் நினைவு தினத்திற்கு வருபவர்கள் சாதி -மத கோசங்கள் எழுப்பக் கூடாது என்றும் நினைவு தினம் மற்றும் குருபூஜைக்கு சொந்த வாகனத்தில் வருபவர்கள் முன் அனுமதி பெற்றுதான் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Also Read: PM Modi Strategy: ரஷ்யா டூ உக்ரைன் பயணம்: மோடியின் ராஜதந்திரமா.! உலக நாடுகள் எப்படி பார்க்கின்றன.?