விருத்தாச்சலம்: வீட்டில் நான் அமரும் நாற்காலியில் ஒட்டுக்கேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்புக் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கும், அவருடைய மகனும், கட்சியின் தலைவருமான மருத்துவர் அன்புமணிக்கும் இடையே கட்சி விவகாரம் தொடர்பாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தநிலையில், நேற்று கும்பகோணத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசுகையில், அன்புமணி பெயருக்கு பின்னால் எனது பெயரை பயன்படுத்தக்கூடாது. தேவையென்றால் இனிஷியலை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

ஒட்டுக் கேட்கும் கருவி

அதனைத் தொடர்ந்து இன்று விருத்தாச்சலம் வந்த பாமக நிறுவனர் ராமதாஸ், செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி இருந்தது. அதுவும் நான் இருக்கும் இடத்தில் ஒட்டுக் கேட்கும் கருவி வைக்கப்பட்டிருந்தது. லண்டனிலிருந்து வரவழைக்கப்பட்ட ஒட்டுக் கேட்கும் கருவி எனது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது என்றும் ராமதாஸ் கூறியிருக்கிறார்.

இந்து சமய அறநிலையத்துறை விதியை எடுத்து கல்லூரி கட்டுவதை எடப்பாடி பழனிசாமி விமர்சித்துப் பேசியது குறித்த கேள்விக்கு, கோவில்களுக்கு சொந்தமாக நிலங்களோ, பணமோ அதிகமாக இருந்தால் அதனை கல்லூரி கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்துவது தவறு இல்லை என தெரிவித்தார்.

ஏற்கனவே, பாமகவின் தலைவராக உள்ள அன்புமணிக்கும், பாமக நிறுவனர் ராமதாஸ் இடையே மோதல் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், திடீரென, இப்படியொரு குற்றச்சாட்டை ராமதாஸ் முன் வைத்துள்ளார்.நேற்று கும்பகோணத்தில் பேசிய ராமதாஸ், என் பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது, இனிஷியலை வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மிகக் காட்டமாகப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, பாமகவின் தலைவராக உள்ள அன்புமணிக்கும், பாமக நிறுவனர் ராமதாஸ் இடையே மோதல் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், திடீரென, இப்படியொரு குற்றச்சாட்டை ராமதாஸ் முன் வைத்துள்ளது பாமக இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அன்புமணி தைலாபுரம் வருகை:

இந்த நிலையில், நேற்று ராமதாஸ் மயிலாடுதுறையில் நடைபெற்ற பாமக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றிருந்த நிலையில், திண்டிவனத்தில் உள்ள அவரது தைலாபுரம் தோட்டத்திற்கு அன்புமணி வருகை தந்தார். சிறிது நேரம் வீட்டில் இருந்து விட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.

இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் 37&ஆம் ஆண்டு தொடக்கவிழா குறித்த அறிக்கையை ஒன்றை வெளயிட்டார் அன்புமணி ராமதாஸ்.,

பாட்டாளி மக்கள் கட்சி என்றாலே நினைவுக்கு வருவது சமூகநீதியும், மக்கள் நலனுக்கான போராட்டங்களும் தான். 36ஆண்டுகளுக்கு முன் சமூகநீதிப் போராளி மருத்துவர் அய்யா அவர்களால் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டதன் நோக்கமே அனைத்து மக்களுக்கும் சமூகநீதியை வென்றெடுத்துக் கொடுக்க வேண்டும்; அனைத்துத் தரப்பு மக்களின் இருக்கும் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்; இழந்த உரிமைகளை மீட்டெடுத்துக் கொடுக்க வேண்டும் என்பது தான். இந்த பாதையில் தான் நமது பயணம் தொடருகிறது.

பாட்டாளி மக்கள் கட்சியின் 37&ஆம் ஆண்டு தொடக்கவிழாவை, அனைத்துக் கிளைகளிலும் குறைந்தது ஓர் இடத்திலாவது முறையான அனுமதி பெற்று கொடிக்கம்பம் அமைத்து பா.ம.க. கொடியேற்றி கொண்டாட வேண்டும்.  இந்த நாளில் தொடங்கி 9 மாதங்களில் நாம் மேற்கொள்ளவிருக்கும் பணிகள், மக்களை வதைக்கும்  திமுக அரசுக்கு முடிவுரை எழுதும் வகையிலும்,  அடுத்த ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் 38&ஆம் ஆண்டு விழாவை ஆளும் கூட்டணிக் கட்சியாக கொண்டாடுவதற்கு தொடக்கவுரை எழுதும் வகையிலும் அமைய வேண்டும். உங்களுக்காக நான் இருக்கிறேன்... எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை. நாம் அனைவரும் இணைந்து உழைத்து புதிய வரலாற்றை படைப்போம். இது உறுதி.