10 பக்கங்கள் கொண்ட இந்த நிதிநிலை அறிக்கையில் மொத்தம் 126 பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன. இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய பரிந்துரைகள் பின்வருமாறு:-
- 2021-22ம் ஆண்டில் தமிழ்நாட்டின் வருவாய் வரவுகள் ரூபாய் 4 லட்சத்து 98 ஆயிரத்து 585 கோடியாக இருக்கும். இது கடந்தாண்டின் வருவாய் வரவைவிட ரூபாய் 2 லட்சத்து 22 ஆயிரத்து 125 கோடி அதிகமாக இருக்கும். கனிம வளங்களை சிறப்பாக கையாள்வதன் மூலம் வரி அல்லாத வருவாயாக ரூபாய் 2 லட்சத்து 9 ஆயிரம் கோடி 945 கோடி ஈட்ட திட்டம் வகுத்திருப்பதால்தான் இந்த அளவு அதிக வரி வருவாய் சாத்தியமாகிறது.
- நடப்பாண்டின் மொத்த செலவினம் ரூபாய் 5 லட்சத்து 5 ஆயிரத்து 786 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூபாய் 4 லட்சத்து 27 ஆயிரத்து 426 கோடியாக இருக்கும். வருவாய் செலவினத்தில் ரூபாய் 50 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ள கடனை அடைப்பதற்காக அசலாக செலுத்தப்படும்.
- 2021-22ம் ஆண்டில் தமிழக அரசின் வருவாய் கணக்கில் ரூபாய் 71 ஆயிரத்து 159 கோடி உபரியாக இருக்கும். நிதிப்பற்றாக்குறை ரூபாய் 7 ஆயிரத்து 201 கோடி என்ற அளவில் குறைவாக இருக்கும்.
- தமிழகத்தின் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பு ரூபாய் 23 லட்சம் கோடி என்ற இலக்கை எட்டியிருக்க வேண்டும். ஆனால், ரூபாய் 20 லட்சம் கோடி என்ற இலக்கை அடைய போராட வேண்டியிருக்கும்.
- 2020-21ம் ஆண்டில் மாநில அரசின் சொந்த வரி வருவாய் இலக்கை விட 17.64 சதவீத வீழ்ச்சி அடைந்து, ரூபாய் 1 லட்சத்து 9 ஆயிரத்து 968 கோடியாக குறைந்துள்ளது. மொத்த வருவாய் 17.63 சதவீதம் வீழ்ச்சியடைந்து ரூபாய் 1 லட்சத்து 80 ஆயிரத்து 700 கோடியாக குறைந்துள்ளது.
- 2020-21ம் ஆண்டின் வருவாய் பற்றாக்குறை ரூபாய் 21,617.61 கோடி என்ற இலக்கைவிட மூன்று மடங்கு அதிகரித்து,ரூபாய் 65,994.06 கோடி என்ற உச்சத்தை அடைந்துள்ளது. நிதிப்பற்றாக்குறையும் ரூபாய் 59,346.29 கோடி என்ற இலக்கை கடந்து ரூபாய் 96,889.97 கோடியாக அதிகரித்துள்ளது.
- 2021-22ம் ஆண்டில் தமிழக அரசின் சொந்த வரி வருவாய் ரூபாய் 1 லட்சத்து 35 ஆயிரத்து 641 கோடியாகவும், மொத்த வருவாய் 2 லட்சத்து 19 ஆயிரத்து 991 ஆகவும் இருக்க வேண்டும். ஆனால்,இந்த இலக்கை எட்ட முடியாது.
- நடப்பாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூபாய் 41 ஆயிரத்து 417 கோடியாகவும், நிதிப்பற்றாக்குறை ரூபாய் 84 ஆயிரத்து 202 கோடியாக இருக்க வேண்டும். ஆனால். இவை இன்னும் கூடுதலாக அதிகரிக்கும்.
- 2021-22ம் ஆண்டில் தமிழக அரசு ரூபாய் 1 லட்சம் கோடிக்கும் கூடுதலாக கடன் வாங்க நேரிடும்.
- 2021-22ம் ஆண்டில் தமிழக அரசின் மொத்த கடன் ரூபாய் 10 லட்சம் கோடியாக இருக்கும்.
- நடப்பாண்டின் முடிவில் ஒவ்வொருவர் பெயரிலும் ரூபாய் 1 லட்சத்து 27 ஆயிரத்து 388 கடன் இருக்கும்.
- 2021-22ம் ஆண்டில் வட்டியாக மட்டும் ரூபாய் 85 ஆயிரம் கோடி செலுத்த வேண்டியிருக்கும்.
- அடுத்த 5 ஆணடுகளுக்கு தொடர்ச்சியாக 10 சதவீதத்திற்கும் அதிகமான ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி எட்டப்பட வேண்டும்.
- மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50 சதவீத பங்கு அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
- 2021-22ம் ஆண்டில் வரியில்லா வருவாய் ரூபாய் 2.09 லட்சம் கோடியாக அதிகரிக்கும்.
- பொதுத்துறை நிறுவனங்களை லாபத்தில் இயங்கச் செய்லதன் மூலம் ரூபாய் 25 ஆயிரம் கோடி கிடைக்கும்.
- கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பங்களுககு தலா ரூபாய் 1 லட்சம் நிதி
- செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்தும். கொரோனா தடுப்பூசி அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்படும்.
- தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும்.
- 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை உயர்த்தப்படுகிறது. மாதம் ரூபாய் 5 ஆயிரம் வரை பட்டமேற்படிப்பு முடித்தவர்களுக்கு வழங்கப்படும்.
- ஏழைக்குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்படும்.
- ஆகஸ்ட் 15 முதல் முழுமையான மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.
- மருத்துவப் படிப்புகளில் ஈழத்தமிழர்களுக்கு 10 இடங்கள் சிறப்பு ஒதுக்கீடாக வழங்கப்படும்.
- ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும்.
- தமிழ்நாட்டில் 100 சதவீத அரசு வேலைகளும் தமிழர்களுக்கு மட்டுமே கிடைக்க சட்டவிதிகள் மாற்றப்படும்.
- தமிழ்நாட்டில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படாது.
- தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை அறிமுகப்படுத்தப்படாது.
- சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை விட சிறப்பானதாக தமிழ்நாடு பாடத்திட்டம் வலுப்படுத்தப்படும்.
இவ்வாறு 126 பரிந்துரைகள் இதில் இடம்பெற்றுள்ளன.