”காலம் கடந்துவிட்டது, சோனியாகாந்தியின் குடும்பம் என்னைச் சந்திப்பதற்கு வாய்ப்பு இல்லையென்றே கருதுகிறேன்” என கால் நூற்றாண்டுகளுக்குப் பிறகு விடுதலையான நளினி தெரிவித்துள்ளார். மேலும் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதால் சோனியா காந்தி குடும்பத்தினர் அன்பானவரை இழந்து விட்டார்கள் என்றும் தன் கவலையைப் பகிர்ந்துள்ளார்.


ராஜீவ்காந்தி மரணம் :


அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பிய விவகாரத்தில்,  ஈழத்தமிழர்கள், சிங்களப்படைகளின் சீற்றறத்தை விட அமைதிப்படையிடமிருந்து இரண்டு மடங்காக எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதனால் இலங்கை அரசின் மீது இருந்த ஆவேசம், மடைமாற்றமாகி, குறிப்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மீது திரும்பியது. 1991ஆம் ஆண்டு மே மாதம், தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகே, ஸ்ரீபெரும்புதூரில் , நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில்  ராஜீவ்காந்தி கலந்து கொண்டார் அதைப் பயன்படுத்தி தற்கொலைப்படை தாக்குதல் மூலம் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார். 


இந்தத் தாக்குதலுக்குப் பின்னணி தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகித்த காவல் துறையினர், பின்னர் ஒருவழியாக உறுதிக்கு வந்தது. இச்சம்பவத்தில் நேரடியாக பங்கேற்றவர்களை சுட்டுக் கொல்ல முடிந்ததே தவிர உயிரோடு பிடிக்க இயலவில்லை.


ஆனால் அதற்கு  பலியானவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். பேரறிவாளன், நளினி, முருகன் ரவிச்சந்திரன் என பலர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு அரசே அவர்களை விடுவிக்க பல சட்டப் போராட்டங்களை கையில் எடுத்தது. ஆனால், அவை அனைத்தும் விசாரணை அமைப்புகள், அதிகார எல்லையைக் காரணம்காட்டி தட்டிக் கழிக்கப்பட்டன.


6 பேர் விடுதலை :


19 வயதில் ராஜீவ் கொலை வழக்கில் சிக்கிய பேரறிவாளன் என்ற இளைஞர், ஆயுட்காலத்தின் பாதி வாழ்க்கையை சிறையில் கழிக்க வேண்டியிருந்தது. அவரது தாயார் அற்புதம்மாள் எடுத்த முயற்சி தோல்விகளையே சந்தித்து வந்தாலும், இறுதியில் ஏதோ ஒரு வழியில் வெற்றிவாகை சூடியது.


அதன் தொடர்ச்சியாக ஆளுநரே மறைமுகமாக எதிர்ப்பை பதிவு செய்திருந்தாலும், இதுதான் எங்கள் முடிவு என்பதை நீதிமன்றம் உறுதி செய்து விட்டது. பேர்ரறிவாளன் நீங்களாக எஞ்சிய ஆறு பேரையும் விடுவித்துள்ளது. 


நளினி ஆறுதல் :


இந்நிலையில், விடுதலையான சிலமணி நேரங்களுக்குள், மறைந்த ராஜீவ்காந்தி குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார் நளினி. ”அன்பானவரை அவர்கள் (சோனியா, பிரியங்கா,ராகுல்காந்தி) இழந்துவிட்டார்கள். சோகம், துக்கம் அவர்களைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அவர்கள் அந்த துக்கத்திலும் சோகத்திலும் இருந்து ஒருநாள் மீண்டு வருவார்கள்” என்றார்.






தொடர்ந்து சோனியா காந்தி குடும்பத்தை சந்திப்பது குறித்துப் பேசிய நளினி, சோனியா காந்தியோ, ராகுல் காந்தியோ தன்னைச் சந்திப்பார்கள் என தான் எதிர்பார்க்கவில்லை என்றார். அதற்கான காலம் கடந்துவிட்டதாகவும் நளினி தெரிவித்துள்ளார்.