தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் அவரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 31 ஆண்டுகால சிறை வாழ்க்கை இன்றோடு முடிவுக்கு வந்துள்ளது.


 


 






உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பைக் கேட்டதும் அவரது வீட்டில் இருந்த பேரறிவாளனின் தாயாரும், சகோதரியும் கட்டியணைத்து ஆனந்தக்கண்ணீரால் அழுது தீர்த்தனர். பேரறிவாளனின் விடுதலை குறித்து பேசிய அவரது தந்தை,  உச்ச நீதிமன்றத்தின் விடுதலை அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.  வீட்டில் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்