தேசியக்கொடியை ஏற்றுவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வழிமுறைகள் வெடித்துள்ள நிலையில் கரூர் அருகே பாஜக நிர்வாகிகள் பாஜக கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி பறக்க விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இந்திய திருநாட்டின் 76வது சுதந்திர தின அமுதப் பெருவிழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாரத பிரதமர் மோடி வீடு தோறும் மூவர்ணக் கொடி என்ற மக்கள் இயக்கத்தை முன்னெடுத்து நாடு முழுவதும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மூவர்ணக் கொடியை ஏற்றி தேசப்பற்றை வெளிப்படுத்தி வருகின்றனர். 


 




இந்த நிலையில் தேசியக் கொடியை ஏற்றும் போது கடைபிடிக்க வேண்டிய பல்வேறு வழிமுறைகளை அரசு சார்பில் ஏற்கனவே பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கரூர் மாவட்டம், வெள்ளியணை பகுதியில் விதிமுறையை மீறி பாஜக கொடிக்கம்பத்தில் மூவர்ணக் கொடியை அப்பகுதி பாஜக நிர்வாகிகள் பறக்கவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், அருகில் அமைந்துள்ள நாம் தமிழர் மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளின் கொடிகளுக்கு மிகவும் தாழ்வாக தேசியக்கொடி பறக்க விடப்பட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 


 




 


தற்போது இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ அப்பகுதி பொதுமக்களால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டு வைரலாகி வருவதுடன், தேசியக் கொடியை அவமரியாதை செய்து விட்டதாக பல்வேறு விமர்சனங்களும் எழுந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 




தேசிய கொடி ஏற்றும் பொழுது பள்ளி மாணவர்களை அமர வைத்து தேசிய கொடி ஏற்றிய ஒன்றிய பெருந்தலைவர். 


கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியம் தரகம்பட்டியில் உள்ளது அரசு மாதிரி பள்ளி இப்பள்ளியில் சுதந்திர தின விழாவில் கடவூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்வராஜ் வருகைக்காக பள்ளி மாணவர்கள் பெற்றோர்கள் வருகைக்காக பலமணி நேரம் காத்திருந்து மாணவர்களை வெயிலில் நிற்க வைத்தனர். இதனால் அங்குள்ள பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் சலசலப்பு செய்தனர்.


 




இதுபற்றி பெற்றோர்கள் கூறியதாவது, 8 மணிக்கு விழா நடப்பதாக கூறினார்கள் வந்தோம். 8:30 மணி ஆகிவிட்டது விழா நடத்துங்கள் மாணவர்கள் பசியில் உணவில்லாமல் பலர் வந்துள்ளனர் என்று கூறியுள்ளார்கள். அதற்கு அந்த  ஓன்றிய பெருந்தலைவர் செல்வராஜ் வந்து தான் கொடி ஏற்றவேண்டும் அவர் பாலவிடுதி ஸ்கூல் முடிச்சு யூனியன் ஆபிஸ் நிகழ்ச்சி முடிந்து தான் வருவார். 


 




என்ன பண்றது நானும் பட்டினியில் சாப்பிடாமல் தான் வந்தேன் என்ன பண்றது காத்திருந்து தான் ஆகனும் ஒருநாள் தானா என்று அலட்சியமாக பதில் அளித்தார். பிறகு செல்வராஜ் வந்த பிறகு 10.30 மணிக்கு கொடியை ஏற்றியுள்ளனர். இதனால் அங்குள்ள பெற்றோர்கள் முகம் சுழித்துள்ளனர். கடவூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்வராஜூக்காக 2 மணி நேரம் தாமதமாக  தேசிய கொடி பறந்ததால், 2 மணி நேரமாக காத்திருந்த மாணவர்கள் பெற்றோர்கள் கொந்தளித்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண