தற்போது பெய்து வரும் கனமழை கருத்தில் கொண்டு பொதுமக்கள் நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்ற கேட்டுக் கொள்ளப்படுகிறது. 


 






இதுதொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கூறுகையில், “பாதுகாப்பான குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் நீர்க்குமிழி வரும் வரை கொதிக்க வைத்த தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சரியான அளவில் குளோரின் கலந்த தண்ணீரை உபயோகிக்க வேண்டும். தொற்று நோய்கள் வராமல் இருக்க அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். 


வெள்ள நீரில் நனைந்த உணவுப்பொருட்களை சாப்பிடக்கூடாது. ஈ மொய்த்த பண்டங்கள் போன்றவற்றை சாப்பிடக்கூடாது வீட்டில் உள்ள எவருக்கேனும் காய்ச்சல் அல்லது வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் சுய மருத்துவம் பார்த்துக் கொள்ளக் கூடாது காய்ச்சல் கண்டவர்கள் தங்களை தனிமைப்படுத்தி ஓய்வு எடுத்துக்கொண்டு அடுத்தவர்களுக்கு பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரே இடத்தில் மூன்று மற்றும் அதற்கு மேற்பட்ட காய்ச்சல் கண்ட நபர்கள் இருந்தாலும் வயிற்றுப்போக்கு போன்றவைகள் அதிகப்படியான நபர்களுக்கு இருந்தாலும் உடனடியாக சுகாதாரத் துறையின் அதற்கு தெரிவிக்க வேண்டும். வயிற்றுப்போக்கு ஏற்படும்போது ஓ ஆர் எஸ் கரைசலை அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பெற்று உபயோகிக்கலாம். 




 


 தங்களது வீடுகளில் உள்ள தரைமட்ட தொட்டிகள் மற்றும் சிமெண்ட் தொட்டிகளை நன்கு பிலிச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். வீட்டைச் சுற்றி இருக்கும் தேங்காய், சட்டைகள். டயர்கள் அம்மிக்கல் போன்றவற்றில் உள்ள தண்ணீரை சுத்தம் செய்து வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள டெங்கு கொசு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


 வயதானவர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் மாணவர்கள் கூடுதல் கவனம் எடுத்துக் கொண்டு மழையில் நனையாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் சிதில மடந்த கட்டிடங்கள் மற்றும் சுவர்கள் போன்றவற்றின் அருகில் செல்வது தவிர்க்கவும் இரவு நேரங்களில் குப்பை கூடங்கள் உள்ள இடங்களுக்குச் செல்லும் போது எந்த வித ஆபத்து ஏற்படும் பொருளோ அல்லது விஷப்பூச்சிகளோ இல்லாமல் இருப்பதே உறுதி செய்து கொண்டு செல்ல வேண்டும். 





 


மேல்கண்ட அறிவுரைகளை மக்கள் தவறாமல் கடைபிடித்து தன்சுத்தம் பேணி சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொண்டு மழையினால் ஏற்படும் நோய்கள் வராமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.