தூத்துக்குடி ரயில் நிலையத்தில் மழை நீர் தேங்கியதால் சில ரயில்களின் சேவை  ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. 


சென்னை செல்லும் முத்துநகர் விரைவு ரயில் இரவு 8.25க்கு மீளவிடானில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 625க்கு புறப்பட வேண்டிய தூத்துக்குடி - நெல்லை ரயில் (06667) ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் இரவு 10.30 மணிக்கான தூத்துக்குடி - வாஞ்சி மணியாச்சி பயணிகள் ரயில் (96847) ரத்து செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி - மைசூர் விரைவு ரயில் மாலை 5.15க்கு மீளவிட்டானில் இருந்து புறப்படும். இரவு 8.25க்கு புறப்படும் வாஞ்சி மணியாச்சி - தூத்துக்குடி பயணிகள் ரயிலும் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 



தூத்துக்குடி - பாலக்காடு விரைவு ரயில் இரவு 10 மணிக்கு மீளவிட்டான் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தென்மாவட்டங்களில் மழை பாதிப்பு இருப்பதால் ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 


தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சாலைகளின் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அனைகள் நிரம்பி வழிவதால் பெரும்பாலான அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.