கரூர் மாவட்டத்தில், இரவு முதல், அதிகாலை வரை விடிய, விடிய மழை பெய்தது. அதிகபட்சமாக பாலு விடுதியில், 43.1 மி. மீ, மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் வெப்ப சலனம் குறைந்து, மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.




அதன்படி இரவு முதல், அதிகாலை வரை, கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விடிய, விடிய மழை பெய்தது. காலை, 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், கரூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு, அரவக்குறிச்சி, 38, தோகைமலை ,ஐந்து, கடவூர், 40, பாடவிடுதி, 43.1, மயிலம் பட்டி, ஆறு ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 11.1 மி மீ., மழை பதிவாகியுள்ளது.


அணைகளில் நீர் நிலவரம்




காவிரி ஆற்றில் மாயனூர் கதவனணக்கு, காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 381 கனஅடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. அந்த தண்ணீர் முழுவதும், குடிநீர் தேவைக்காக திறந்து விடப்பட்டது. நான்கு பாசனகளை வாய்க்கால்களிலும், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், வடக்காடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், நங்கஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நங் காஞ்சி அணையின் நீர்மட்டம் தற்போது, 35.14 அடியாக உள்ளது. நங்காட்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது் க. பரமத்தி அருகே, கார்வாலி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 6 மணி நிலவரப்படி வினாடிக்கு, ஐந்து கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 13.12 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக மிதமான மழை பெய்வதால் வெப்பம் விலகி குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.


தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து 107 டிகிரி பாரன்ஹீட் மேல் பதிவாகி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. 


மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக மாலை நேரத்தில் மிதமான மழை பெய்து வந்தது இந்த நிலையில் இன்று காலையில் மிதமான மழை பெய்ய தொடங்கியதால் வெப்பம் விலகி வீடுகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.


கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட  பசுபதிபாளையம், காந்திகிராமம், ராயனூர், தாந்தோணி மலை உள்ளிட்ட இடங்களில்  மிதமான மழை பெய்து வருகிறது. அதே போன்று சுற்றுவட்டார பகுதிகளான கிருஷ்ணராயபுரம், மாயனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.