தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக,  அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இன்று எங்கெல்லாம் மழை?


தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களிலும், வரும் 30ஆம் தேதி 15 மாவட்டங்களிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


26.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


27.04.2023 முதல் 29.04.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 


30.04.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  
பெரியகுளம் (தேனீ) 7, சின்னக்கல்லார் (கோவை) 6, கயத்தாறு (தூத்துக்குடி), வால்பாறை  PAP (கோவை), வால்பாறை  தாலுகா  அலுவலகம் (கோவை), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), வால்பாறை  PTO (கோவை), நிலக்கோட்டை (திண்டுக்கல்) தலா 5, ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), அரண்மனைப்புதூர் (தேனி), வடக்குத்து (கடலூர்), கடலாடி (ராமநாதபுரம்), சோலையார் (கோவை) தலா 4, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமாரி), கயத்தாறு ARG (தூத்துக்குடி), பெரியார் (தேனி), அருப்புக்கோட்டை (விருதுநகர்), வீரபாண்டி (தேனி), புத்தன் அணை (கன்னியாகுமாரி), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), கோவில்பட்டி AWS (தூத்துக்குடி) தலா 3, பூதப்பாண்டி (கன்னியாகுமாரி), வெம்பக்கோட்டை (விருதுநகர்), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), கோவில்பட்டி (திருச்சிராப்பள்ளி), கொடைக்கானல் (திண்டுக்கல்), தம்மம்பட்டி (சேலம்), மணிமுத்தாறு (திருநெல்வேலி),  மயிலாடுதுறை, பேச்சிப்பாறை (கன்னியாகுமாரி) தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.      


மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.