தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் அடுத்தடுத்து மூன்று புயல்கள் உருவானது. இந்த 3 புயல்களும் ஆந்திரா நோக்கியே சென்றதால் தமிழகத்தில் எதிர்பார்த்த மழை பெய்யாமல் ஏமாற்றியது. இதனால் கடந்த சில நாட்களாகவே வறண்ட வானிலையே நிலவி வந்தது. தற்போது ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வரும் 29ம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும். இது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருமாறி, டிசம்பர் 2ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை
இதன் காரணமாக இன்று தேனி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: Paternity Leave: அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்! இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு.. எத்தனை நாட்கள் தெரியுமா?
நாளை எந்தெந்த மாவட்டங்களில் மழை
அதேபோல் நாளை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.
தென் தமிழகம் மழை வார்னிங்
நவம்பர் 30ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
