அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 9 இடங்களில் கடந்த மூன்றாம் தேதி அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை இன்று காலை முடிவுக்கு வந்தது. இந்நிலையில், இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், ரொக்கம் மற்றும் பொருட்கள் குறித்து அமலாக்கத்துறை ட்வீட் செய்துள்ளது. அதில் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூபாய் 22 லட்சம், 60 நில ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத ரூ. 16.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய நான்கு இடங்களில் செந்தில் பாலாஜியின் உதவியாளர் செங்குந்தபுரத்தில் உள்ள பைனான்ஸ் மற்றும் அம்பாள் நகரில் உள்ள வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்று பல்வேறு 2 பைகளில் ஆவணங்கள் பறிமுதல் செய்து எடுத்துச் சென்ற அதிகாரிகள் சோதனை நிறைவு பெற்றது.
குஜராத் மாநிலத்தைச் சார்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான தனலட்சுமி மார்பல்ஸ் மற்றும் அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்ற நிலையில், தனலட்சுமி மார்பிள்ஸ் கடையில் சோதனை நிறைவு பெற்றது. வீட்டில் இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றது. புதிதாக சோதனை இராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள லக்கி டிரேடர்ஸ் என்ற டையிங் அலுவலகம் மற்றும் வீடு செந்தில் என்பவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது.
லக்கி டிரேடர்ஸ் என்ற டையிங் நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டில் சிறிது நேரத்தில் சோதனை நிறைவு பெற்று பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்து எடுத்துச் சென்று அதிகாரிகள் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள லக்கி டிரேடர்ஸ் என்ற டையிங் நிறுவனத்தின் உரிமையாளர் செந்தில் என்பவருக்கு சொந்தமான இடங்களிலும் நள்ளிரவு சோதனை. ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள லக்கி டிரேடர்ஸ் என்ற டையிங் உரிமையாளர் செந்தில் என்பவருக்கு சொந்தமான அலுவலகத்தில் சோதனை இரவிலும் தொடர்ந்து, இன்று நிறைவு பெற்றது. மொத்தம் 9 இடங்களில் சோதனை நடைபெற்று வந்த நிலையில் சோதனை நிறைவு பெற்றது.
இதையடுத்து அமலாக்கத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள ட்வீட்டில், ”கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூபாய் 22 லட்சம், 60 நில ஆவணங்கள் மற்றும் கணக்கில் வராத ரூ. 16.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
சுவாரஸ்யம் இதோ இருக்கு: இதையும் படிங்க..